வயது, 10 தான்; எடையோ, 192 கிலோ!
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவைச் சேர்ந்த சிறுவன், ஆர்யா பெர்மானா; 10 வயதாகும் இவனின் தற்போதைய எடை, 192 கிலோ!தினமும், ஐந்து வேளை சாப்பிடும் இவன், காய்கறி, இறைச்சி, மீன் மற்றும் முட்டை என, எதையும் விட்டு வைப்பது இல்லை. அதிக எடை காரணமாக, இவனை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் திணறுகின்றனர், அவனது பெற்றோர். மேலும், அவனது அளவுக்கு ஏற்ற, உடைகளும் கிடைப்பது இல்லை. இதனால், எப்போதும், மேல் சட்டை இல்லாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளான்.— ஜோல்னாபையன்.