எய்ட்ஸ் நோயாளியின் சாதனை!
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்தவர், ஆண்ட்ரே ஜிஜால், 63. எய்ட்சால் பாதிக்கப்பட்ட இவர், இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பல்வேறு சாகசங்களை செய்து வருகிறார். ஏற்கனவே, 13 நாட்கள், தொடர்ந்து, வெந்நீர் தொட்டியில் அமர்ந்து, சாதனை படைத்துள்ளார். அடுத்ததாக, நீண்ட நேரம், டிஸ்கோ டான்ஸ் ஆடியும், சாதித்துள்ளார். தற்போது, தொடர்ந்து, 50 மணி நேரம், போனில் பேசி, சாதனை படைத்துள்ளார். இதற்காக, உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு தொடர்ச்சியாக போன் செய்து பேசியுள்ளார், 'நோய் பாதிப்பு உள்ள நிலையில், உங்களால் எப்படி இந்த சாதனையை படைக்க முடிந்தது...' என கேட்டபோது,'சாதிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால், எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம்...' என, உறுதியுடன் கூறுகிறார்.- ஜோல்னா பையன்.