அம்பாசிடர் கார், மவுசு குறையவில்லை!
ஒரு காலத்தில், சாலைகளில் அம்பாசிடர் கார்களை தான், அதிகமாக காண முடியும். ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது. மேற்குவங்க மாநிலம் மட்டும், இன்னும் இந்த பாரம்பரிய கார்களை விட்டு விடவில்லை.குறிப்பாக, கோல்கட்டா மக்கள், இன்னும் அம்பாசிடர் கார்களை பயன்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து நெரிசலான சாலைகளில் கூட, ஒன்றோடு ஒன்று முட்டி மோதி இன்றும் அம்பாசிடர் கார் ஊர்ந்து செல்வதை காணலாம். — ஜோல்னாபையன்