இப்படியும் ஒரு விமான நிலையம்!
உலகின் மிகச் சிறந்த விமான நிலையம் என்ற பெருமையை, சிங்கப்பூரில் உள்ள சாங்கி விமான நிலையம் தட்டிச் சென்றுள்ளது. இதை விமான நிலையம் என்று சொல்வதை விட, மினி சொர்க்கம் என, அழைக்கலாம். அந்த அளவுக்கு அழகும், பிரமாண்டமும் இங்கு கொட்டி கிடக்கிறது. இங்கு மூன்று முனையங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஆறு கோடி பயணிகளை கையாளும் திறன் இந்த விமான நிலையத்துக்கு உண்டு. திரையரங்குகள், பூங்கா, குழந்தைகள் பொழுது போக்குவதற்கான வசதிகள், நீச்சல் குளம், உடற்பயிற்சி கூடம், கண்களை கவரும் மின் விளக்குகள் என, இங்கு இல்லாத வசதிகளே இல்லை. இங்கு வரும் வெளிநாட்டு பயணிகள், 'ஒரு விமான நிலையத்தை இப்படி கூட அமைக்க முடியுமா...' என, ஆச்சரியத்தில் வாய் பிளக்கின்றனர்.— ஜோல்னாபையன்.