உள்ளூர் செய்திகள்

இன்னொரு பிரம்மோற்சவம் !

திருமலை திருப்பதியில் வருடம் முழுவதும் விழாக்காலம்தான். என்றாலும் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் பிரம்மோற்சவம்தான் பெரிய விழா. இந்த பிரம்மோற்சவ விழா எப்போதும் வருடத்திற்கு ஒரு முறைதான் வரும். இந்த வருடம், இரண்டு முறை வந்துள்ளது. முதல் பிரம்மோற்சவம் சமீபத்தில் முடிந்த நிலையில்,இதோ இரண்டாவது பிரம்மோற்சவத்திற்கு திருமலை தயாராகி வருகிறது.நடந்து முடிந்த பிரம்மோற்சவத்தில் கலை நிகழ்ச்சிகள் சுமாராகவே இருந்தது என்பதை பக்தர்களும், பார்வையாளர்களும் சுட்டிக்காட்டிய தால், நடைபெற உள்ள பிரம்மோற்சவத்தில் அந்தக் குறை தெரியாத அளவிற்கு, பிற மாநில கலை நிகழ்ச்சிகள் நிறைய இடம் பெற உள்ளதாம். மேலும், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் மலர்க் கண்காட்சி திருமலைக்கு வரும் பக்தர்களை பெரிதும் கவரக்கூடிய விஷயம். அதை இன்னும் சிறப்பாக்கவும் முயற்சி கள் நடந்து வருகின்றன.பிரம்மோற்சவ விழா நடப்பது என்னவோ ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருமலையில்தான் என்றாலும், அதற்காக தயாராகும் பல வேலைகள் தமிழகத்தில் இருந்துதான். மலை மீது வரும் பக்தர்களுக்கு வழிகாட்டி, சேவை செய்யும் சேவார்த்திகள் பலரும் தமிழகத்தில் இருந்துதான் செல்கின்றனர். அதே போல மலை மீது நடக்கும் பல்வேறு பூ அலங்காரத்திற்கு தேவையான பூக்கள் யாவும் பழநி போன்ற பகுதிகளில் இருந்துதான் செல்கிறது. இந்த பூக்களையும் இங்குள்ள வர்த்தக பெருமக்கள் போட்டி போட்டு, இலவசமாக அனுப்பி வைக்கின்றனர் என்பது இன்னும் விசேஷம்.பிரம்மோற்சவ விழா விவரம்...08.10.10 காலை கொடியேற்றம்        மாலையில் பெரிய சேஷவாகனம்09.10.10 காலை சின்ன சேஷவாகனம்.    மாலையில் ஹம்சவாகனம்10.10.10 காலை சிம்ம வாகனம்              மாலையில் முத்துபந்தல் வாகனம்11.10.10 காலை கற்பகவிருட்ச வாகனம்    மாலையில் சர்வபூபாள வாகனம்12.10.10 காலை மோகினி அவதாரம்    மாலையில் கருட  வாகனம்13.10.10 காலை ஹனுமந்த வாகனம்    மாலையில் கஜவாகனம்14.10.10 காலை சூர்ய பிரபை வாகனம்    மாலையில் சந்திர பிரபை வாகனம்15.10.10 காலை ரத உற்சவம்            மாலையில் குதிரை வாகனம்16.10.10 காலை சக்ரஸ்நானம்               மாலையில் கொடியிறக்கம்.நடந்து முடிந்த பிரம்மோற்சவத்தை பார்க்க முடியவில்லையே என ஏக்கத்துடன் இருப்பவர்கள் இப்போது நடக்க உள்ள இன்னொரு பிரம்மோற் சவத்தை பார்ப்பதன் மூலம் சந்தோஷப்படலாம்.                                           ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !