அந்துமணி பதில்கள்
** நா.சுப்பையா, காட்டூர்: யாரை அதிகம் நம்பலாம்? சொந்த பந்தங்களையா, உறவினர்களையா?இரண்டுமே அல்ல; உங்களை! உங்கள் மீது நீங்களே நம்பிக்கை வையுங்கள்... உங்களால் முடியும் என்ற தைரியத்தின், ஊக்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள்... 'தன் கையே தனக்குதவி' என்பதில் மாறாத பற்று வையுங்கள்... அதை விடுத்து, மற்றவரை நம்புவது என்றென்றும் படு குழியில் தள்ளி விடும்!****கு.அழகேசன், தேனி: நடிகை என்பதற்கு, ஆங்கிலத்தில், 'ஆக்ட்ரஸ்' என்ற வார்த்தை இருக்கையில், பிரபல ஆங்கில நாளிதழ்கள் கூட, 'ஆக்டர்' என்றே எழுதுகின்றனவே... ஏன்?'ஆக்ட்ரஸ்' என எழுதுவது, தங்களை சிறுமைப்படுத்துவதாக உள்ளதாம். ஹாலிவுட், பாலிவுட் நடிப்புத் தாரகைகள் சிலர், போர்க்கொடி உயர்த்தியதால், அமெரிக்கா, இங்கிலாந்து, நம் நாடு உட்பட, பல நாடுகளிலும் ஆங்கிலத்தில், 'ஆக்டர்' என்றே நடிகையரை குறிப்பிடுகின்றனர்.****வி.நந்தகுமார், காங்கேயம்: விளையாட்டு தொடர்பான கேள்விகள் உங்களுக்கு வருவதில்லையா? அது சம்பந்தமான பதில் எதுவுமே தருவதில்லையே!தெரியாத சப்ஜெக்டுகளில் மூக்கை நுழைப்பதில்லை. இந்தியாவில் குக்கிராமங்களில் கூட, கிரிக்கெட் பாப்புலராக உள்ளது... உண்மையைச் சொல்கிறேன்... கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது எனக்கு. இதைப் போலவே மற்ற விளையாட்டுகளிலும் ஆர்வமில்லை!**** * ஆர்.முரளி, ஒத்தக்கல் மண்டபம்: என் நண்பனுடன் பங்குதாரராக சேர்ந்து, வியாபாரம் ஆரம்பிக்க உள்ளேன். பின்னாளில், வியாபாரம் தொடர்பாக எங்களுக்குள் பிரச்னை வந்து விடாமல் இருக்க, என்ன செய்ய வேண்டும்?ஆரம்பம் முதலே, பங்குதாரர்களுக்குள் ஒளிவு, மறைவு கூடாது. எல்லா விஷயங்களிலும் ஒத்த கருத்தை அடைந்து முடிவெடுக்க வேண்டும்... இவை இரண்டும் அடிப்படையாக அமைந்தால், பிரச்னைகள் பெரும்பாலும் ஏற்படாது.****ஆர்.கல்யாணசுந்தரம், சிவகிரிப்பட்டி: கணவனை இழந்த பெண்கள், துக்கத்தை தாங்கிக் கொண்டு, நீண்ட நாள் வாழ முடியும் என்றும், மனைவியை இழந்த ஆண்களால் முடியாது என்றும் கூறுகின்றனரே...உண்மை தான்! வலி, இழப்பு, துக்கம் ஆகியவற்றை தாங்கும் ஆற்றல், பெண்களிடம் இயற்கையிலேயே உண்டு. ஆனால், ஆண்கள் கோழைகள்... சிறு தலைவலி என்றால் கூட பயந்து விடுவர். அவர்களால் நோய், வலி, இழப்புகளைத் தாங்க முடியாது.****வி.சிவராஜ், அனுமந்தபுரம்: பலரிடமும் கேட்டு விட்டேன்... யாருக்கும் தெரியவில்லை... நீங்களாவது சொல்லுங்கள்... உலகத்தில் உள்ள மொத்த நாடுகள் எத்தனை?இந்த பதிலை எழுதும் வரை, 272. பெரிய நாடுகளை பிரித்து, இன்னும் சில குட்டி நாடுகள் எதிர்காலத்தில் உதயமாகலாம்...***** எஸ்.சோமசுந்தரம், பொன்னேரி: உ.பா., சாப் பிடுபவர்கள் அனைவரும் கெட்டவர்களா?அப்படிச் சொல்பவர்கள் விவரம் அறியாதவர்கள். உ.பா., எவ்வளவு சாப்பிட்டாலும், நிதானம் தவறாமல், தமக்குள் ஒரு மகிழ்ச்சியையும், திருப்தியையும் ஏற்றிக் கொள்பவர்களே அதிகம்... ஏன், நம் லென்ஸ் மாமா இல்லையா?***