அந்துமணி பதில்கள்
** சே.நாகராஜன், மரக்காணம்: தேவைக்கு மேல் என்னிடம் பணம், சொத்து உள்ளது. ஆனால், மனதில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே உள்ளதே...பணம் படைத்த பலருக்கும் உள்ள வியாதி இது... கையில் உள்ள பணத்தை எப்படி எங்கு, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாததாலேயே இக்குறை இருக்கிறது.****கே.குமரமூர்த்தி, செய்யார்: பச்சோந்திக்கும், மனித குலத்துக்கும் ஒற்றுமை உண்டு என்கின்றனரே...உண்மைதான்... தன்னைச் சுற்றி உள்ள நிறத்திற்கு ஏற்றபடி, தன் நிறத்தை மாற்றிக் கொள்கிறது பச்சோந்தி. தான் பழகும் இடத்திற்கு ஒத்துப் போவது போல், குணத்தை மாற்றிக் கொள்கிறது மனித மனம்.**** டி.புனிதா, ஓசூர்: உழைப்பின்றி சம்பாதிக்க ஏதாவது வழி உண்டா?உண்டே... அரசியல்வாதி ஆகுங்கள். போலீஸ் வேலையில் சேருங்கள். பணம் கொட்டும்; வைக்க இடம் இருக்காது.***** சா.தனபால், கொரட்டூர்: இன்றைய மக்களின் அதிகபட்ச விருப்பமாக இருப்பது எது?வம்புகள்... தங்களை தவிர, மற்றவர்கள் பற்றிய பேச்சுகள் பேசுவதையே விருப்பமாக, தொழிலாக கொண்டுள்ளனர்.****எம்.நெல்லையப்பன், தேனி: சுரிதார்களை இறுக்கமாக அணிந்து, ஆண்களை இம்சை செய்கின்றனரே இளம் பெண்கள்...நீங்களே சொல்லுங்க... மாமிஸ்களில் இருந்து பாட்டீஸ் வரை, சுரிதாருக்கு மாறிட்டாங்க இப்ப... அப்போ, 'யங்' கேர்ள்ஸ்க்கும், மேற்படி கும்பலுக்கும் வித்தியாசம் தெரிய வேண்டாமா? அதனாலதான், லேட்டஸ்ட் பேஷனில் தைத்து, அணிந்து கொள்கின்றனர்.***** எல்.முத்துக்குமார், சென்னை: வேலை இல்லா பட்டதாரிகளுக்கு, உங்கள் ஆலோசனை என்ன?தம் பெயருக்கு பின்னால் போட்டுக் கொண்டுள்ள பட்டத்தை மறந்து விட வேண்டும்... அப்படி மறந்தால், அவர்களிடமிருக்கும், 'ஈகோ' மறையும். அப்புறம் என்ன... ஆயிரம் வேலை இடங்கள் கண் முன்னே விரியுமே!****ஆர்.கணேஷ்பாபு, சென்னை: சகலபாடிகளைப் பற்றி மனைவியிடம் குறை சொல்லலாமா?உங்கள் குடும்பத்திலேயே குழப்பம் உண்டாக்க முயலுகிறீர்களே... வாழ்க்கைப் படகு தள்ளாடாமல் ஸ்மூத்தாக செல்ல, மனைவி சைடை போற்றி புகழுங்கள். உங்கள் ஜால்ரா சப்தத்தில், உங்கள் மனைவியே காதை மூடிக் கொள்ள வேண்டும்.***