உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

*ஜி.கனகவேல், கடலூர்: டென்ஷனாகாமல், நிம்மதியாக, சந்தோஷமாக இருக்க வழி சொல்லுங்களேன்.... எனக்கு மூக்கு நுனியில் வரும் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தான் கேட்கிறேன்...இதற்கு மனப்பயிற்சி அவசியம். 'நான் கோபப்பட மாட்டேன்... எனக்கு கோபமே வராது...' என ஒரு மந்திரம் போல, திரும்ப, திரும்ப உங்களுக் குள்ளே சொல்லிக் கொள்ளுங்கள். கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால், 'கோபத்தை என்னிடமிருந்து அகற்று...' என, தினமும் வேண்டுங்கள். இந்த மனப்பயிற்சி, நாளா வட்டத்தில் கோபத்தை நிச்சயம் போக்கி விடும். அப்புறம் ஏன் டென்ஷன்!*****எஸ்.மனோகரன், போத்தனூர்: புதிது புதிதாக, 'டிவி' சேனல்கள் ஆரம்பிக் கின்றனரே... இவர்கள் மக்களுக்கு எந்த விதத்தில் சேவை செய்யப் போகின்றனர்?சேவையாவது, இடியாப்பமாவது? அவரவர் துட்டு சம்பாதிக்கவும், கடும் போட்டியில் நிலைத்து நிற்கவுமே, தா# @Œனலுடன், அதற்குத் துணையாக புதிய சேனல்கள் துவங்குகின்றனர். இதனால், தாய்மார்களின் மூளை, மேலும் மேலும், மழுங்கடிக்கப்படுமே தவிர, எந்த பயனும் ஏற்பட போவதில்லை.****ஆர்.ராமதாஸ், பனங்குடி: பொய் சொல்லாமல் காதலிக்க முடியுமா?நம்மிடம் கைவசம் அனுபவம் இல்லாததால், லென்ஸ் மாமாவை, 'கன்சல்ட்' செய்தேன்... 'முடியவே முடியாது' என்கிறார். அவ்வப் போது சில, 'ஸ்வீட் லைஸ்' - இனிப்பான சரடுகள் விட்டால்தான், வாழ்க்கை சுவைக்குமாம்! - என்ன கண்றாவியோ!****வி.ஜெயராமன், திருவத்திபுரம்: கவிஞர்கள், இயல்பு நிலை தவறி இருப்பது ஏன்?அவர்கள் யதார்த்தவாதிகள் அல்ல... வானத்தை வில்லாக வளைத்து விட முடியும் என்ற கற்பனையில் வாழ்பவர்கள்... உலக நடப்பை அவர்கள் புரிந்து கொள்ள விரும்புவதில்லை; மாறாக, தாம் நினைப்பது போல், உலகம் மாற வேண்டும் என எண்ணுபவர்கள்... இதனாலேயே, அவர்களது இயல்பு வாழ்க்கையில் குழப்பத்தை தேடிக் கொள்கின்றனர்.**** பா.வேலுச்சாமி, நெய்வேலி: வாழ்க்கை வண்டியில், மனைவி முன் சக்கரமா, பின் சக்கரமா?பின் சக்கரம்! அது, சுற்றினால் தான் வண்டி ஓடும். குடும்ப பாரம் முழுவதையும் சமைப்பதிலிருந்து, பிள்ளைகள் படிப்பது வரைக்கும், சகல பொறுப்புகளும், அவர்கள் தலையில் தானே... ஆண்களுக்கு, சம்பாதிப்பது மட்டும் தானே பொறுப்பாக இருக்கிறது.***** சி.வெட்டும்பெருமாள், பீளமேடு: கவலையே இல்லாத மனிதர் யார்?இருவகை மனிதர்கள் கவலைப்படுவதில்லை... முதலாமவன், பற்றற்றவன்... அடுத்தவன், பருத்த பர்ஸ் உள்ளவன். முதலாமவனை பற்றி சிந்திக்க வேண்டாம்; இரண்டாமவன், கனத்த பர்சின் மூலம், கவலைகளை எப்படியாவது ஓட வைத்து விடுகிறான்.**** ஏ.ஜோதிகுமார், சூலூர்: பசியால் ஒருவன் மாண்டு போவது, அவன் குற்றமா? ஆளும் அரசின் குற்றமா?பிச்சைக்காரர்கள் வாழ வில்லையா? திடகாத்திரமாக, உருண்டு, திரண்டு தானே இருக்கின்றனர். தனி மனித முயற்சிகளை மேற்கொள்ளாமல், தொட்டதற்கெல்லாம், 'அரசு... அரசு...' என ஓலமிடுவது பைத்தியக்காரத்தனம்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !