உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

*பி.காந்திமதி நாதன், திருப்புவனம்: என் மகன், படித்துவிட்டு, வேலையில்லாமல் இருக்கிறான். ஏதாவது தொழிலில் ஈடுபடுத்த விரும்புகிறேன். எந்த தொழில் துறையில் இறக்கலாம்... யோசனை கூறுங்களேன்...தரகர் - புரோக்கர் - கமிஷன் ஏஜன்ட்... இதெல்லாம் பழைய பெயர்கள்... இப்பெயர்களை கவுரவக் குறைவாக நினைக்க ஆரம்பித்து, 'மீடியேட்டர்' என, தங்கள் பெயரை மாற்றி கொண்டுள்ளனர் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள். இவர்களின் தொழில்தான், 'மினிமம் ரிஸ்க்கில்' ஏராளமாக, சுலபமாக காசு பார்க்கும் தொழிலாக உள்ளது.****எஸ்.சரவணன், ஆவடி: பழனி, சபரிமலை போன்ற தலங்களுக்கு, கடன் வாங்கி மாலை போட்டு, திண்டாடி நிற்பவர்கள் பற்றி...கடன் வாங்கி தம்மை தரிசிக்க வரும்படி, எந்தக் கடவுளும் போதிக்கவில்லை... அவரவர் ஊரில் உள்ள கோவில்களுக்கு போனாலே போதும்! கடன் வாங்கி மாலை போடுபவர்கள், 'கொழுப்பு' கூடிப் போனவர்கள்; திண்டாடத்தான் செய்வர்!**** டி.லோகேஷ், சிதம்பரம்: மனைவியை அடிமையாக நினைக்கும் கணவனை திருத்துவது எப்படி?கணவன் கையை எதிர்பார்க்காத, பொருளாதார சுதந்திரம் அடையும் பெண், துணிச்சல் பெறுகிறாள்; அவளை அடிமையாக நடத்த கணவன் துணிவதில்லை. அப்படியே நடத்த முயன்றாலும், 'பினான்ஷியலி இன்டிபெண்டன்ட்'டாக இருக்கும் பெண்கள், சுயபச்சாதாபம் கொள்வதில்லை!****கே.கோவிந்தராஜன், போடிநாயக்கனூர்: ஆங்கில மொழி அகராதியை தலைகீழாகத் திருப்பி விட்டேன்... 'கக்கூஸ்' என்பது ஆங்கில மொழி சொல் இல்லையா?இல்லையாம்... அது, ஹிந்தி, தமிழ் மொழிச் சொல் கூட இல்லையாம்! டச்சு மொழியாம். கழிப்பிடத்தை அம்மொழியில், 'கக்கூயூஸ்' என்று சொல்வராம். அதுதான் திரிந்து, இப் போது உள்ள வடிவத்தை எடுத்துள்ளது என்றார் விவரம் அறிந்த உதவி ஆசிரியர் ஒருவர்!***** எஸ்.வெங்கடேஷ், ராஜபாளையம் : தங்களை யாரும் கவனிப் பதில்லை என்ற மனநிலைக்கு ஆட்பட்டுள்ளனரே வயதானவர்களில் பலர்... இதை மாற்றுவது எப்படி?இந்த மனநிலைக்கு உள்ளானவர் களை, இனி எவ்வளவு தான் கவனித் தாலும், தம் சுயபச்சாதாபத்தை விட்டு வெளியே வர மாட்டார்கள். ஆனால், மனசாட்சிக்கு விரோதமில்லாமல், இவர்களை கவனிப்பது உரியவர்களின் பொறுப்பு! நாமும் வயதான காலத்தில், இந்த மாதிரியான மனநிலைக்கு உள்ளாகி விடக் கூடாது என்பதில் அனைவரும், இப்போதே பக்குவப் படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட வேண்டும்.****எம்.வடிவேல் முருகன், கண்டமங்கலம்: நீங்கள் சென்ற வெளிநாடுகள் பலவற்றில், ஏதாவது ஒரு நாட்டிலாவது, நம் நாட்டில் காணப் படுவது போல நடை பாதைகள், குப்பைக் கூளங்களுடன் அருவருப் பாக காட்சியளிப்பதைப் பார்த்திருக் கிறீர்களா?எல்லா நாடுகளிலும், நம்மூர் போன்ற சில ஏரியாக்கள் இருக்கத்தான் செய்கின்றன. அமெரிக்காவில் நியூயார்க் - குயின்ஸ் போன்ற பகுதிகளில், ஜப்பானின் டோக்கியோ நகரின் சில பகுதிகள், ரொம்ப மோசம்! நடைபாதை குப்பை அருவருப்பு யூனிவர்சல் தான்!***** பி.கணேஷ் பாபு, சென்னை: நடிகன் - அரசியல்வாதி ஒப்பிடுங்களேன்!இருவருமே நடிகர்கள் தான்; பணத்தை வாங்கிக் கொண்டு நடிக்கிறான் நடிகன்; பணம் கிடைக்கும் என்று நடிக்கிறான் அரசியல்வாதி! ஆக, இருவருமே பணம் பண்ணி விடுகின்றனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !