உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

*என்.மோதிலால் பாபு, கோவை : எனக்கு மனைவி ஆகப் போகிறவள், திருமணத்திற்கு பின்பும் படிக்கப் போவதாகவும், படிப்பு முடியும் வரை குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என்றும் கண்டிஷன் போடுகிறாள். என்ன செய்யலாம்?உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள்; கல்யாணத்துக்கு முன்பே, தன் விருப்பங்களை, தேவைகளை ஓப்பனாக சொல்லும் பெண், எதையும் மறைக்க விரும்பாத பெண்ணாக இருப்பாள். பொறுப்பும் அதிகமாக இருக்கும்; தைரியமாக, 'எஸ்' சொல்லுங்கள்!***** ஜெ.சிவானி, புதுவை: நான் நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவள். வரும் வருவாயில் குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது. என்ன செய்யலாம்?சிறு கைத்தொழில்கள் செய்து, பெண்கள் முன்னேற தேவையான பயிற்சிகள், செய்முறைகளை, 'டிவி'யில் மதிய நேரங்களில் காட்டுகின்றனரே... அதைப் பாருங்கள். பணம் சம்பாதிக்க வழி கற்றுக்கொடுக்கும் உபயோகமான நிகழ்ச்சி அது!****வி.வைரமுத்து, சத்தியமங்கலம்: பதவி, பணம் இருந்தபோது, என்னிடம் உதவி பெற்றவர்கள், இப்போது எனக்கு உதவி தேவைப்படும்போது, கண்டுக்க மாட்டேங்கின்றனரே... தவறு யாருடையது?உங்களுடையதுதான்! எந்த உதவி யாருக்கு செய்யும் போதும், 'இவரிடமிருந்து எனக்கு எதுவும், எப்போதும் கிடைக்காது!' என்று தீர்மானம் செய்து கொண்டே செய்யுங்கள்! உதவி செய்தவரை உதாசீனப்படுத்துவது தான் மனித இயல்பு! ஆரம்பத்திலேயே மனதை அதற்கு பக்குவப்படுத்திக் கொண்டுவிட வேண்டும்! நீங்கள் இதில் தவறி விட்டீர்கள்!***** எச்.ராஜ்குமார், எடப்பாடி : படித்த பெண்களைவிட, படிக்காத பெண்களை மணமுடித்து கொண்டால், நிம்மதியாக வாழ்க்கை நடத்தலாம் என்கின்றனரே... உங்கள் பதில் என்ன?முற்றிலும் தவறான கருத்து இது! இரு தரப்பிலும், 'பைட்டர் காக்ஸ்' இருக்கத்தான் செய்கின்றனர். 'லகான் பிடித்திருப்பவனைப் பொறுத்து நடந்து கொள்ளும் குதிரை...' என்ற பழமொழியை கேள்விப் பட்டு இருப்பீர்கள்; அன்பான, ஆதரவான மனைவியைப் புரிந்து கொண்டு நடக்கும் கணவனுக்கு, படித்த பெண் - படிக்காத பெண் இருவருக்கும் வேறுபாடு இருக்காது! ****எல்.தினேஷ், காரைக்குடி: எழுத்துக்கள் மூலம் எல்லார் மனதிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியுமா?எல்லார் மனதிலும் என்று கூற முடியாவிட்டாலும், பெரும்பான்மை யினரிடம் முடியும்; லெனின், பாரதியார், அண்ணாதுரை இவர்களெல்லாம், தம் எழுத்தால் தானே சரித்திரம் படைத்தனர். அவ்வளவு ஏன்? ஏதோ பேனா கிடைத்தது என எழுத ஆரம்பித்த என்னால் கூட, சிலரின் மனதில் நல்ல மாற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளதே!****எஸ்.ஷர்மிளா, நீலகிரி: இக்கால பெண்களிடம் தங்களுக்கு உள்ள பிடித்த, பிடிக்காத குணம் எது?சமூகத்தில் தமக்கு சரி சமமான இடம் வேண்டும் என்ற உத்வேகத்துடன் ஒருங்கிணைந்து செயல்படுவதும், அந்த சரிசமமான அந்தஸ்து தர வல்லது கல்வி என்பதை உணர்ந்து, ஆண்களை விட அதிக மதிப்பெண்கள் பெறுவது, அவர்களை விட, அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெறுவது! பிடிக்காத அம்சம்; வாய் கிழிய எவ்வளவுதான் வரதட்சணைக் கொடுமையை எதிர்த்து பேசினாலும், தமக்கு என்று வரும்போது, வரதட்சணை தர வாய்ப்பொத்தி சம்மதம் தெரிவிப்பது!***** ஆர்.ரத்தினம் பானு, அம்பை : ஒரு கணவன், தன் ஆயுள் வரை நிச்சயம் தன் மனைவியை காப்பாற்றியே தீருவான். ஆனால், அவன் ஆயுளுக்குப் பின், அவள் வாழ பணமின்றி முடியாது. எனவே, ஒரு பெண் யாரை முதன்மையாக நேசிப்பது? சடுதியில் தோன்றி மறையும் கணவனையா? ஆயுள் வரை அவளை காப்பாற்ற போகும் பணத்தையா?கணவனுக்குப் பின் காப்பாற்ற போவதாக நம்பும் பணத்தையும், கணவன் தானே சம்பாதித்து சேர்த்து வைக்கிறான்... எனவே, சந்தேகமில்லாமல் யாரை நேசிக்க வேண்டும் என்பது தெரிகிறதல்லவா!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !