உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

இ.பழனிச்சாமி, பூந்தோட்டம்: திறமையானவர்கள் பலர் இருந்தும், சில தலைவர்கள் வாரிசுகளை ஊக்குவிப்பதன் காரணம் என்ன?யாரை குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று புரிகிறது. பெட்டி பெட்டியாக அடித்த கோடிகளை இழக்க, எந்த அரசியல்வாதிக்கு தான் மனம் வரும்?கே.தினகரன், பழனி: ஆண்களை விட, பெண்களிடம் சினிமா, 'டிவி' சீரியல் மோகம், அதிகம் காணப்படுவது ஏன்?புரியும் விஷயங்களை விரும்புகின்றனர். அவர்களிடையே கல்வி அறிவு குறைவு என்பதால், அரசியல் உட்பட பல விஷயங்களை, பெண்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை. அதனால், புரியும் விஷயங்கள் மீது, மோகம் கொள்கின்றனர்!மொ.நந்தகுமார், காட்டூர்: துன்பம் ஏன் பிறக்கிறது?'அவன் நம்மை விட நல்லா இருக்கிறானே... இவன் செம வசதியிலே வாழ்கிறானே...' என்று நினைக்க ஆரம்பிக்கும் போது, துன்பம் பிறந்து விடுகிறது!ச.பிரான்சிஸ், பிள்ளைச்சாவடி: ஆண் - பெண் சுதந்திரமான நட்பு, எந்த அளவு இருக்க வேண்டும்?ஊருக்கு ஊரு, நாட்டுக்கு நாடு, இனத்திற்கு இனம் வெவ்வேறு அளவுகோல்கள் இதற்கு உள்ளன. நம்மூரின், 'லிமிட்' என்னவென்பது உங்களுக்கு தெரியாதா என்ன?பூ.சீனிவாசன், தேவராயபுரம்: வன்முறையில் ஈடுபடும் கட்சிகளை, அரசியலில் இருந்து நீக்கினால் என்ன?அப்புறம் எந்த கட்சி தான் மிஞ்சும்?த.ஜெயக்குமார், சாலிகிராமம்: நம்மவர்கள் இன்று மகிழ்ச்சியை இழந்து, துன்பத்துடன் அல்லல்படுவது ஏன்?போலி கவுரவம், ஆடம்பர வாழ்க்கை! இவ்விரண்டால், மகிழ்ச்சியை தொலைத்து, தலை குனிந்து நிற்கின்றனர். எளிய பழக்கங்களும், உடையும், கடன் வாங்காத குணமும் மட்டுமே, மகிழ்ச்சியை கொண்டு வரும்!ரா.ராமச்சந்திரன், பரமக்குடி: காதலி வரவுக்காக காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் என்ன செய்யலாம்?கந்த புராணம் படிக்கலாம் - இது பெண் உ.ஆ., கூறியது. பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருக்கும் மற்ற, 'கலர்'களை பார்க்கலாம் - இது லென்ஸ் மாமா. காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பம் வாய்த்தது இல்லை - இது நான்!எஸ்.சுபா, மேலமாசிவீதி: பணம் தான் உலகம் என்கிறாளே என் தோழி...இல்லவே இல்லை... நமக்கு நாமே தான் உலகம். பணத்தை படைத்தது நாம் தான். பணம் தான் நம்மை நம்பி இருக்க வேண்டுமே தவிர, அதை நம்பி, நாம் இருக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !