அந்துமணி பதில்கள்!
வி.ராம்பாபு, அவனியாபுரம்: இந்நாட்டில் மிகவும் பரிதாபத்திற்குரியவர்கள் யார்?என்ன இப்படி கேட்டுப்புட்டீங்க... நம்மள நாமே மறக்கலாமா?எம்.சந்திரமோகன், நங்கநல்லூர்: பிடிக்காத பெண்ணை, பெற்றோரின் வற்புறுத்தலால் திருமணம் செய்து கொள்ளலாமா?அந்த தவறை ஒரு நாளும் செய்து விடாதீர்கள்; அப்பாவிப் பெண் ஒருத்தியின் வாழ்வு பாழ்பட்டுப் போய்விடும்!பொ.ஜெகதீசன், மேற்கு முகப்பேர்: மது மயக்கம் எப்போது தீரும்?'அது உள்ளே செல்லும் அளவைப் பொறுத்தது' என்கிறார் லென்ஸ் மாமா!சி.ஆர்.இந்திரா, வேலூர்: என்னிடமே மற்ற பெண்களை பற்றி வர்ணிக்கிறார் என் கணவர். என்ன செய்யலாம்?மனைவியரை சீண்டி, வேடிக்கை பார்க்க நினைக்கும் சில கணவர்களின் குணம் இது; கண்டு கொள்ளாதீர்கள். மீண்டும் மீண்டும் வர்ணித்தால், 'ஆமாம்' போட்டு ஆமோதியுங்கள். 'ஸ்போர்டிவ் டைப்' என்றால், நீங்களும் நாலு ஆண்களை வர்ணியுங்கள்!கே.ராஜா, சிதம்பரம்: ஒரு கன்னிப் பெண், தன்னையே ஏமாற்றிக் கொள்வது எப்போது?மூளையை மீறி, மோகம் ஆட்சி செய்ய முற்படும் போது!வி.சிவசங்கரன், சூலமங்கலம்: இன்றைய குமரிப் பெண்களுக்கு ஏற்படுகிற கவலைகள், பணத்தைப் பற்றியா அல்லது மணத்தை பற்றியா?திருமணத்திற்கு முன் இரண்டாவதைப் பற்றி; பின், முதலாவதை பற்றி!எஸ்.அன்வர் அலி, கனகம்மா சத்திரம்: நான் பல முறை, நியாயமான கணக்கு எழுதி காட்டியும், என் கணக்கை நம்பாமல், விற்பனை வரி அதிகமாக போட்டு விடுகின்றனர். வரியை கட்டினாலும், மற்றவர்களை போல் நானும் பொய் கணக்கு எழுதட்டுமா? ஊரோடு ஒத்து வாழ் என்கின்றனரே...மூட்டைப் பூச்சிக்கு பயந்து, வீட்டை கொளுத்தட்டுமா என்று கேட்கிறீர்கள்... பிரச்னைகள் இல்லாத தொழில் சேவை, என்ன தான் இருக்கிறது?ம.குணசேகரன், அழகாபுரி: பிச்சைக்காரர்களை ஒழிக்க ஒரு வழி...பர்சை திறக்காமல் இருந்தால் போதும்...ஜி.ரேவதி, நெல்லிக்குப்பம்: உமக்கு பதில் சொல்ல மட்டும் தான் தெரியுமா? கேள்வியெல்லாம் கேட்க மாட்டீரா?கேள்வி கேட்டுக் கேட்டு, ஒரு பதில் கூட பத்திரிகைகளில் வெளிவராத நிலையில், மற்றவர்களின் கேள்விகளுக்கு, பதிலளிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டதே!