அந்துமணி பதில்கள் !
** சி.டி.சுந்தரேசன், சென்னை: வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரில் நிலம் வாங்கவோ, காஷ்மீரிகள் வெளி மாநிலத்தாருக்கு விற்கவோ முடியாது என்கின்றனரே... உண்மையா?உண்மைதான்! காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து கொடுத்து அம்மக்களின் கலாச்சாரத்தை காக்க செய்யப்பட்ட ஏற்பாடு இப்போது விபரீதத்தில் முடிந்துள்ளது. நாட்டின் மற்ற பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவத்தினரையும், வீர மரபினரையும் காஷ்மீரில் படிப்படியாக குடியமர்த்துவதில் ஆரம்பித்து, பல சீர்திருத்தங்கள் கொண்டு வராவிட்டால் நமக்கு இல்லை காஷ்மீர்!****கே.செந்தாமரை செல்வி, திருவள்ளூர்: கறுப்பு என்றாலே சிலர் சங்கடமாக பார்க்கின்றனரே... கறுப்பாக இருந்தாலும், அவர்களின் உள்ளம் வெள்ளை என்பதை எப்படி புரிய வைப்பது?கறுத்த நிறமுடையவர்கள், குறிப்பாக பெண்கள், தங்களை அறியாமலேயே, தங்களுக்குள், 'நான் கறுப்பு... கறுப்பு அழகில்லை...' என்ற தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்கின்றனர். இது தவறு! இந்தத் தாழ்வு மனப்பான்மையை ஒழித்துக் கட்டினால், மற்றவர்கள் நினைப்பதைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் எழாது! உண்மையிலேயே கறுப்பு என்பது அற்புத வண்ணமல்லவா?**** பி.சடகோபன், திருப்பூர்: உலக அரசியலில், ஜனநாயகத்தை அழிக்க சர்வாதிகாரம் வந்ததா? இல்லை, சர்வாதிகாரத்தை ஒழிக்க ஜனநாயகம் பிறந்ததா?மனிதனின் தோற்றத்தையும், மனித இன வளர்ச்சியையும், அதன்பின் உலக அரசியலையும் ஆராயும்போது, சர்வாதிகாரத்தை ஒழிக்கவே ஜனநாயகம் பிறந்தது; சர்வாதிகாரம் நிலையானது அல்ல என ஆதாரப்பூர்வமாக கூறுகிறார் மதுரை காமராஜர் பல்கலையில் அஞ்சல் மூலம் சரித்திரம் முதுகலை பயிலும் நண்பர் ஒருவர்!****சி.முரளிதரன், தேனி: 'ஓ.பி., (O.B.,) அடித்தேன்!' என்கின்றனரே... அதன் அர்த்தம் என்ன?'அவுட் ஆப் பிசினஸ்' என்ற ஆங்கில சொல்லின் சுருக்கம் ஓ.பி., அதாவது, செய்ய வேண்டிய தொழிலை செய்யாமல் இருப்பதை out of Business என்கின்றனர்!****எஸ்.ஹேமலதா, ஊட்டி: என்னை பெண் பார்க்க வந்தவர் குண்டாக இருக்கிறார். அவரைத் திருமணம் செய்து கொள்ளலாமா?குண்டாக இருப்பவர்களுக்கு இளகிய நல்ல மனது உண்டு என்பது தெரியாதா உங்களுக்கு! நல்ல மனது இருந்தால், புரிந்து கொண்டு அன்பாக நடத்துவார். நல்ல மனது வேண்டுமா? இல்லை, உடல் கவர்ச்சி வேண்டுமா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.*** *ஆர்.சுப்ரமணியன், மதுரை: அந்துமணியாரே... 'ஆவி'யை நம்புகிறீர்களா?நிச்சயமாக நம்புகிறேன். இட்லி வேகும்போது, பானையில் இருந்து வரும், 'ஆவி'தானே!***** எஸ்.சுப்பராயன், கோவை: 'கடனும் வாங்காதே, கடனும் கொடுக்காதே... அதுதான் நிம்மதியான வாழ்க்கை...' என்றார் மறைந்த தமிழ்வாணன்! இதை 1963 முதல் பின்பற்றுகிறேன். இதனால், பலரை பகைத்துக் கொண்டேன். தங்கள் கருத்து என்ன?இந்த கொள்கையைப் பின்பற்றியதால் பொருள் நஷ்டம் ஏதும் இல்லையல்லவா இதுவரை... அதை நினைத்து சந்தோஷம் கொள்ளுங்கள். காசுக்காக வரும் நட்பும், உறவும் ஒரு போதும் நிலைக்காது; தேவையுமில்லை!***