அந்துமணி பதில்கள்
கே.சங்கரன், ஆலந்தூர்: அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரே கொள்கையாக எதை கருதுகிறீர்கள்?உங்களுக்கு தெரியாதா என்ன? 'சந்தர்ப்பவாதம்' - இது தான், இன்று அனைத்து கட்சிகளின் ஒரே கொள்கை! ப.குருதேவி, சோமனூர்: இந்தக் காதில் வாங்கி, அந்த காதில் விட்டு விடுவது சரியா, தவறா?ஒரு விஷயத்தில் சரி! அது, நாம் விரும்பாவிட்டாலும், வலுக்கட்டாயமாக மற்றவர் பற்றி கூறப்படும் வம்பு, தும்புகள்... அவற்றை இந்த காதில் வாங்கி, அந்த காதில் விடுவது சரியே!எம்.சிவராம், மயிலாப்பூர்: பணம், பதவி, புகழ் இவற்றில் அதிகமாக மனிதனை பாதிப்பது எது?மூன்றும் அளவாக இருக்கும் வரை எந்த பிரச்னையும் இல்லை. மூன்றில் ஒன்று மிஞ்சினாலும் அழிவுதான்!டி.கதிரேசன், திருப்பூர்: நான் ஒரு மாணவன்... படிக்கும்போது, மனம் எதையெதையோ நினைக்கிறதே தவிர, பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி?பாடத்தை புரிந்து படிக்காததாலேயே மனம் அதில் லயிப்பதில்லை. பாடத்தை விரும்பி, அதன் மீது ஆசைப்பட்டு படிக்க வேண்டும். புரியவில்லை என்றால், ஆசிரியரிடம் கேட்டு, தெளிவு பெற்று படித்தால் வெற்றி நிச்சயம்!எம்.ஜோசப், வேலூர்: நதிகளை இணைப்பதன் மூலம் குடிநீர் தேவை, விவசாயப் பயன்பாடு போக, வேறு என்ன நன்மை கிடைக்கும்?நீர் வழிப்பாதை கிடைக்குமே! ஒரு ஹார்ஸ் பவர் சக்தியில், 150 கிலோ சரக்கை சாலை வழியாக கொண்டு சென்றால், ரயிலில், 500 கிலோவையும், நீரில், 4,000 கிலோவையும் கொண்டு செல்ல முடிகிறதே! இதனால், கோடிக் கணக்கில் எரி பொருள் செலவு மிஞ்சுமே!சி.சரத்ராஜ், திண்டிவனம்: குறிப்பிட்ட வாசகர்களுக்கு மட்டும் அதிக வாய்ப்பு தருகிறீர்களே... ஏன்?வாசகர்களிடையே ஒரு போதும் பேதம் பார்ப்பதில்லை நான். ஒரு சிலரின் பெயர் அடிக்கடி இடம் பெற்று இருக்கலாம். அவர்கள் என் நண்பர்களோ, உறவினர்களோ அல்லர். அவர்களின் கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரிந்திருக்கிறது அல்லது என்னால் இந்த கேள்விக்குத் தான் பதிலளிக்க முடியும் எனக் கணித்து கேட்கின்றனர்... அவ்ளோ தான் மேட்டர்!ஜி.ஜெயக்குமார், கடலூர்: மனித மனக் கோணல்களுக்கு உணவுப் பழக்கமும் ஒரு காரணம் என்கின்றனரே...உண்மைதான்; அதிக கொழுப்பு மற்றும் உணர்வுகளைத் தூண்டும் பழம், காய், பட்டை போன்றவை வக்கிரத்தை அதிகப்படுத்தவே செய்யும். மேற்படி உணவை அதிகம் சேர்த்துக் கொள்ளும் பஞ்சாபி மக்கள், 71 சதவீதம் பேர், திருமண உறவு இருக்கும் போதே, 'வெளியில்' இன்னொரு, 'உறவு' வைத்துக் கொள்வதாக கூறுகின்றனர். இதுவே, சாதாரண உணவுப் பழக்கம் உள்ள பெங்களூருவில் ௭ சதவீதம் தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏ.வெற்றிவேல், அருப்புக்கோட்டை: எப்படிப்பட்ட ஆண்களை இளம் பெண்களுக்கு பிடிக்கிறது?தாராளமாக செலவு செய்யும் அளவுக்கு சம்பாதிக்கும் ஆண்களையே பிடிக்கிறது. அவர்கள் தோற்றம் சரியில்லை என்றாலும், படிப்பு இல்லை என்றாலும் பரவாயில்லை என்கின்றனர்!