உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

* எஸ்.ஸ்ரீதரன், புதுச்சேரி: மகனை விலைபேசி பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணங்களை, புனிதமான பந்தங்களாக உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா?கை நீட்டி காசு வாங்கிய பின், அங்கே புனிதம் எங்கிருந்து வரும்? இதில், பெற்றோரை குற்றவாளியாக முதன்மைப்படுத்துவதும் தவறு. விலை போகும் ஆண்மகன் தன் புத்தியை,'சேட்' கடையிலா வைத்திருக்கிறான்?எஸ்.வெங்கடகிரி, கோயம்புத்தூர்: பெண் தோழியை செல்லமாக அடித்துப் பேசலாமா?செமத்தியா திரும்ப கிடைக்கும் எனத் தோன்றினால், கையை, பின்புறம் கட்டிக் கொள்ளுங்கள்!என்.கிருஷ்ணன், பழனி: மேப்பில் உள்ளது போல தான், காஷ்மீரின் முழு பகுதியும் நம்மிடம் உள்ளதா?இல்லை. நம்மிடம் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதிகளை நாம் அச்சிடும், 'மேப்'களில் காட்டுவதில்லை; இதை, பி.ஓ.கே.,என்கின்றனர். அதாவது,'பாக்.,ஆக்குபைட் காஷ்மீர்!' இதை போல சீனா, நம்மிடமிருந்து பிடித்துக் கொண்ட பகுதிகளையும், நாம், 'மேப்'களில் காட்டுவதில்லை!* எம்.மகேந்திரன், பெங்களூரு: அயோக்கியர்களிடம் பணம் சேர்ந்தால் என்ன ஆகும்?அயோக்கியத்தனம் அதிகரிக்கும்; அடுத்தவன் மனைவியை அபகரிக்கச் செய்யும்... ஏன் கொலை கூட செய்ய வைக்கும்!வ.சத்தியநாராயணன், திண்டுக்கல்: 'டேட்டிங்' கொடுப்பது என்றால் என்ன?நேரம் ஒதுக்குவது தான்! இந்த வார்த்தை ஆணுக்கும், பெண்ணுக்கும் தான் பொருந்தும். 'நாளை மறுநாள், டேட்டிங்!' என்றால், 'நாளை மறுநாள், என் ஆளை சந்திக்கிறேன்...எனக்காக நேரம் ஒதுக்கித் தந்திருக்கிறாள் - கிறார்...' என்று பொருள்! எ.அமிர்தலிங்கம், காஞ்சிபுரம்: 'எல்லாம் என் தலைவிதி; இதை யாராலும் மாற்ற முடியாது...' என்று சிலர் சொல்கின்றனரே...திட்டமிடாமல், லாப - நஷ்டங்களை அனுமானிக்காமல், சரியாக உழைக்காமல் திரியும் சோம்பேறிகளின் முடக்கு வாதத்தனமான, 'ஸ்டேட்மென்ட்'கள் இவை!வி.கவுசல்யா, திண்டிவனம்: தங்கள் கணவர், பிற பெண்களுடன் பேசுவதைக் கூட மனைவிமாரால் சகித்துக் கொள்ள முடியாது. ஆனால், சினிமா நடிகர்கள், பல நடிகைகளுடன் கட்டிப் பிடித்து, முத்தம் கொடுத்து நடிக்கின்றனரே... அவர்களது மனைவியர் இதை எப்படி ஜீரணித்துக் கொள்கின்றனர்? அவர்களுக்கு, 'பொசசிவ்னஸ்' கொஞ்சம் கூடக் கிடையாதா?கண்களை மறைத்து விடும் குணம் கொண்டது பணமும், புகழும். தம் கணவரால் பெற்ற செல்வமும், அதனால் கிடைக்கும் வசதி வாய்ப்பு மற்றும் சுகங்கள், பலவற்றையும் விட்டுக் கொடுக்கும் குணத்தை, மனப்பான்மையைக் கொடுத்து விடுகிறது நடிகர்களின் மனைவியருக்கு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !