உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

*வி.ராஜாமணி, மதுரை: விவாகரத்துக்கள் இப்போது பெண்களிடையே அதிகரித்தும், சகஜமாகியும் விட்டதே...உண்மைதான்... உதவாக்கரை ஆணுடன் குப்பை கொட்ட இக்கால பெண்கள் தயாரில்லை... ஒத்துப் போகவில்லை என்றால், விட்டு பிரிவதில் தவறில்லை என்ற மனப்பான்மை வலுத்து விட்டது - அது சரி என்றே தோன்றுகிறது!****எஸ்.தண்டபாணி,பொள்ளாச்சி: தேவைக்கு மேல் என்னிடம் பணம் - சொத்து உள்ளது... ஆனால், மனதில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே உள்ளதே...பணம் படைத்த பலருக்கும் உள்ள வியாதி இது... கையில் உள்ள பணத்தை எப்படி, எங்கு, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாததாலேயே இக்குறை இருக்கிறது.***** ஏ.சம்பத், சோழவந்தான்: நம் நாட்டின் கடன் சுமை குறைந்து வருகிறதா?அது எப்படி குறையும்? 10 மந்திரிகள் இருக்க வேண்டிய இடத்தில், 100 பேர் அல்லவா வைத்துக் கொண்டுள்ளோம். '89-90 நிதி ஆண்டில் வருடத்திற்கு 18 ஆயிரம் கோடி கடன் தவணை செலுத்திக் கொண்டிருந்தோம். இப்போதோ, அதுவே பல மடங்கு உயர்ந்து விட்டது. அதாவது, நம் வரி வசூல் வருமானத்தில் 50 சதவீதம் கடன் கட்டவே போய் விடுகிறது... அப்புறம் எங்கே, வளர்ச்சி பணிக்கு பணம் கிடைக்கப் போகிறது?****எல்.பாலசுப்ரமணியன், திருப்பூர்: வினோதமான சர்வே ஏதாவது சொல்லுங்களேன்...கன்னிப் பெண்ணை ஆணும், கன்னி கழியாத ஆணை, பெண்ணும் மணக்கவே விரும்புவர். ஆனால், ஹாங்காங் சர்வே ஒன்று என்ன சொல்கிறது தெரியுமா? 14 சதவீத ஆண்களும், 21 சதவீத பெண்கள் மட்டுமே, 'பிரஷ்' ஆக வேண்டும் எனக் கேட்கின்றனராம்.... வினோதம் தானே இது!***** அ.அபுபக்கர், சிவகாசி: பண்புள்ள ஒரு சமுதாயத்தை யாரால் உருவாக்க முடியும்?பள்ளிக்கூட ஆசிரியர்களால்! அவர்களால் மட்டுமே பண்பும், வலிமையும் மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். மாணவ பருவத்திலேயே பண்பட்டு விட்டால், சமுதாயம் ஒழுக்கமானதாகி விடும். ஆனால், பள்ளிக் கூட வாத்தியார்கள் பலர், ஸ்கூலுக்குப் போகாமல் சம்பள பணத்தை வட்டிக்கு விட்டுக் கொண்டல்லவா உள்ளனர்!****எஸ்.ஜெயராணி, விருதுநகர்: பொய்யே பேசாத மனிதர் யாராவது உண்டா உலகில்!ஏன் இல்லாமல்? ஊமைகள் பேசுவதே இல்லையே! ***** கே.ஏ.ஜெயராம், ராமநாதபுரம்: போகிற போக்கை பார்த்தால், அரசு உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளைக்கு யாரும் பெண் கொடுக்க மாட்டார்கள் போலிருக்கிறதே...அரசு வேலை பார்ப்பதில் இன்னும் பேச்சுலராக யார் இருக்க போகின்றனர்? எல்லாருக்கும் திருமணமாகி இருக்கும்... இனிமேல் அரசு வேலைக்கு ஆட்களும் எடுக்கப் போவதில்லை... அப்படியே எடுத்தாலும், நீங்கள் சொல்வது போல் பெண் கிடைப்பது சிரமம் தான்!****ஆர்.தாஸ், கடலூர்: நன்றாக பேசிக் கொண்டிருந்த தோழி, கொஞ்ச நாளாய் பேசாமல் இருக்கிறாள்... என்ன செய்வது?நிரந்தரப் பணி, நல்ல வரும்படி தரும் தொழில் என எதையாவது தேர்வு செய்து கொள்ளுங்கள்... பழையபடி சிரித்து, சிரித்து பேசுவாள்... இக்கால பெண்கள் மிகவும் சூட்டிப்பு; வருமானமில்லாதவர்களை ஓரங்கட்டி விடுவர்!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !