உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

எல்.மகாலிங்கம், மதுரை: பெண் தோழிகளுடன், 'டேட்டிங்' வைத்துக் கொண்ட அனுபவம் உண்டா?எங்கே... பெண்களுடன் பேசுவது என்றாலே, 'சரக்கு' சாப்பிட்டவர்கள் பேசுவது போன்று, நாக்கு குழறுகிறது; கை-கால்கள் தந்தி அடிக்கின்றன. இந்த அழகில், 'டேட்டிங்காமே... டேட்டிங்!'* கே.ரவிக்குமார், விருதுநகர்: கிராமங்களில் உள்ள பெண்கள் உழைப்பாளிகளா, நகரத்தில் உள்ள பெண்கள் உழைப்பாளிகளா?இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவரல்ல; ஆனால், கிராமப் பெண்களின் உழைப்பு, நேரம் ஆகியவை, குடி தண்ணீருக்காக நீண்ட துாரம் சென்று வருவது, அடுப்பு எரிக்க சுள்ளி பொறுக்க போய் வருவது போன்ற தேவை இல்லாத விஷயங்களுக்காக வீணடிக்கப்படுகிறது; இது, நம்மை ஆள்வோரின் இயலாமையால் நடக்கிறது!* ஆர்.செந்தில், புதுச்சேரி: பலவீனனாக, எதையும் செய்யும் ஆற்றல் இல்லாதவனாக என்னை எப்போதும் உணர்கிறேனே...இது உங்கள் தப்பல்ல; உங்கள் பெற்றோர் தவறு. மன தைரியம் அளிக்காமல், பயம் காட்டியே குழந்தையை வளர்ப்பதால் இந்த எண்ணம் தோன்றுகிறது. இளம் வயதிலேயே ஆக்கப்பூர்வமான, உறுதியான, உதவுகிற எண்ணத்தை மனதில் விதைக்க வேண்டும். போகட்டும்... உங்களை பலவீனமாக்கும் எண்ணங்களுக்கு இனிமேலாவது மனதில் இடம் கொடாமல், 'என்னால் முடியும்' என்ற எண்ணத்தை, இரவு -- பகலாக மனதில் விதையுங்கள்; தன்னம்பிக்கை தானே வந்து விடும்!எஸ்.சின்னசாமி, சீர்காழி: எவ்வளவு நேரம் துாங்குகிறீர்கள்... என்ன மாதிரியான கனவுகள் வருகின்றன?மதியம் கணிசமான நேரத்தையும் சேர்த்து ஆறு மணி நேரம். யாருக்கும் துரோகம் செய்வதில்லை; எவரிடமும் சண்டை இல்லை; கடன் வாங்கவில்லை.- அதனால், கனவுகளும் வருவதில்லை! * அ.நந்தினி, சென்னை: மன வலிமையில் உறுதியானவர்கள் ஆண்களா, பெண்களா?சந்தேகமே இல்லாமல் பெண்கள் தான். குடிகாரக் கணவன், விட்டு விட்டு ஓடிப் போய்விடும் கணவன் போன்ற கேரக்டர்களை மன வலிமையாலேயே சமாளிக்கின்றனர். கணவன் இறந்து போனாலும், உடனே, ஆண்களைப் போல அடுத்ததை தேடுவதில்லை. தன் பிள்ளை குட்டிகளுக்காக, மன வலிமையாய் தனித்தே நிற்கிறாள்; மன வலிமையால், உடல் வலிகள் பலவற்றையும் அவளே தாங்குகிறாள்.எம்.நாகமுத்து, திருப்பூர்: காலை உணவாக இட்லி, தோசை போன்றவற்றை தயாரித்து உண்ணும் பழக்கம் நகரங்களில் வெகுவாக குறைந்து வருகிறதே...உண்மை தான்; கணவன் - மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகளில், ரொட்டி, சோளம், கம்பு, அவல் சாப்பிடும் கலாசாரம் பரவி வருகிறது. இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு இரண்டாயிரத்து 200 கோடி ரூபாய்க்கு ரொட்டி விற்பனையாகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !