உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

*ஜி.பாலாஜி, கோவை: இத்தனை வருடத்தில் கல்வியில் நாம் எவ்வளவு முன்னேறி இருக்கிறோம்...இதோ... முன்னேற்றத்தைப் பாருங்களேன்... 2001 கணக்குப்படி, படித்தவர்கள் 64.83 சதவீதம். 2011-ல் 74.04 சதவீதம்! முன்னேற்றம் எப்படி!****கே.குழந்தையன், சென்னை: சிறுகதை, தொடர்கதை, முழு நாவல் - எதை எழுதுவது சிரமம்?முதலாவது... குறைந்த பக்கத்திற்குள் ஒரு விஷயத்தை விளக்கி, முடிவும் சொல்ல வேண்டுமே சிறுகதையில்... பிரபல எழுத்தாளர் ஒருவர் தம் சமீபத்திய பேட்டியில், 'எனக்கு சிறுகதை எழுத, 60 - 70 பக்கங்கள் இப்போது தேவைப்படுகிறது...' என்று கூறியுள்ளார்!****சா.ஸ்ரீகாந்த், சின்ன காஞ்சிபுரம்: 'எட்டாவது படித்தவர்கள் முதல், டிகிரி படித்தவர்கள் வரை வேலைக்கு ஆட்கள் தேவை; எமது நிறுவனத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்!' என, நிறைய விளம்பரங்கள் நாளிதழ்களில் வருகிறதே...வெட்டி வேலை; இப்படி விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் எல்லாம், 'பிளேடு' கம்பெனிகள். இப்படிப்பட்ட விளம்பரங்களை பத்திரிகைகள் வெளியிடவே கூடாது!***** ஆர்.மோகனா, புங்கமுத்தூர்: நகரத்து நாகரிக வாழ்க்கை, கிராமத்து எளிய வாழ்க்கை - இன்றைய நாளில் தேர்ந்தெடுக்க எது சிறந்தது?நகரங்களில் நாகரிக வாழ்க்கை ஏது? நரக வாழ்க்கைதான்! எங்கும் கூட்டம், எதிலும் கூட்டம்... பஸ் பிடிக்க கூட அடிதடி... என் ஓட்டு கிராமத்திற்கே!****டி.உஷா, விருத்தாசலம்: அமெரிக்கா எப்படி இருக்கிறது?கல்யாணமாகாமலேயே, 100க்கு, 30 குழந்தைகள் பிறக்கும் நிலையில் உள்ளது. நம் நாடு எவ்வளவோ மேல்!***** ஆர்.அகல்யா, சிதம்பரம்: யாரைக் கண்டால் உங்களுக்கு கோபம் வரும்?என் படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கல... என்று பி.ஏ., எம்.ஏ., படித்துவிட்டு புலம்பும் வெட்டி சோத்து பட்டாளத்தைக் கண்டால்!****எல்.விஸ்வேஸ்வரன், ஆண்டிப்பட்டி: இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள் எவ்வளவு பேர் இருக்கும்?நம் மொத்த மக்கள் தொகையில், 24.9 சதவீதம் பேர். அதாவது, கால்வாசி ஜனத்தொகை வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வதாக, 2000-01தேதிய சாம்பிள் சர்வே கூறுகிறது. இதுவே, 26.2 சதவீதமாக இதற்கு முன் வருடம் இருந்ததாம்!*****தா.மீனா,விருதுநகர்: தொலைபேசியில் ஆபாச வார்த்தைகளால், குடும்பப் பெண்களிடம் அசடு வழியும் கயவர்களை என்ன செய்வது?பழக்கமில்லாத குரல் என்றால், இவ்வாறான பேச்சு தொடங்கும் போதே இணைப்பை துண்டித்து விடலாம். தொடர்ந்து இது போன்ற தொந்தரவு என்றால், தொலைபேசி இலாகாவினரின் உதவியை நாடி, அழைப்பவரை தெரிந்து, காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கலாம். 'கால் ஐடன்டிபிகேஷன்' என்ற ஒரு வசதி உள்ளது. இதன் மூலம், அழைப்பவரின் எண்ணை அறிய முடியும்... வழிபவர்களை ஒழித்து விடலாம்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !