உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* டி.வி. அய்யாச்சாமி, திருப்பூர்: காக்கா பிடித்திருக்கிறீர்களா?இல்லை, 'பிரண்ட்' ஆக்கிக் கொண்டிருக்கிறேன். நாலு துண்டு ரொட்டியை, பதமாக தண்ணீரில் பிசைந்து, காலை, 7:00 மணிக்கு, வீட்டு திண்ணையில் அமர்ந்தால் போதும்... என்னை சுற்றி, 10 பேர் அமர்ந்து விடுவர்... மற்றவர்கள் கீழே! கூடவே அமரும், 10 பேருக்கும் என்னை அடையாளம் தெரியும்; எனக்கும்! 'கா கா' என கத்தி, இடைஞ்சல் கொடுக்காமல், நான் போடும் உருண்டையை எடுத்து, பறந்து விடுவர்; மீண்டும் அடுத்த நாள் காலையில் தான்! * எல். சிதம்பரம், காரைக்குடி: மாடு வளர்ப்பவன் பிச்சைக்காரனா?வீடு வீடாக சென்று, புல், வைக்கோல் மற்றும் மருந்து வாங்கணும்ன்னு, மாடு வளர்ப்பவர்கள் கையேந்தணும்... கன்று குட்டிக்கு விடும் பாலை கூட ஒட்ட கறந்து, சுண்ட காய்ச்சி பருகி உடம்பை தேத்தலாம்; ஆனால், பசு எக்கேடு கெட்டால் என்ன என்ற மனநிலைதானே, இந்த அரசியல் கட்சிகளிடமிருக்கிறது!வி. ஜெயா, கடையநல்லுார்: 'மஞ்சள் ஒரு மங்களமான நிறம்... தினமும் முகத்தில் பூசு...' என்கிறாளே, என் பாட்டி!உண்மை தான்! முகத்தில் தினமும் பூசி வந்தால், பெண்களுக்கு மீசை முளைக்காது. ஆனால், மஞ்சள் காமாலையும், மஞ்சள் நோட்டீசும் ரொம்ப, 'டேஞ்சர்' ஆனவை!அ. குமரன், சென்னை: தமிழனுக்கு, இன்று எதன் மீது பாசம் அதிகம்!'டாஸ்மாக்' மீது தான்! 'இனி, மாலை, 5:00 மணி முதல், 8:00 மணி வரை தான் திறந்திருக்கும்...' என, ஒரு,'டுபாக்கூர்' செய்தியை, 'நெட்'டில் பார்த்ததும், 'மூன்று நாட்களுக்கு, சரக்கு வாங்கி, 'ஸ்டாக்' வைக்க, என்னிடம் காசில்லையே...' எனக் கதற ஆரம்பித்து விட்டானே! எம். பாலசுப்பிரமணியன், திண்டுக்கல்: வாரமலர் இதழுக்கு அனுப்பும் படைப்புகள், எத்தனை வாரத்திற்குள் வெளியாகும்? அக்கால கட்டத்திற்குள் வெளியாகவில்லை என்று தெரிந்தால், அதையே மற்ற இதழ்களுக்கு அனுப்பலாம் தானே!குறைந்தது, இரண்டு மாதங்கள் ஆகலாம்; இதே நிலையே மற்ற இதழ்களிலும்! அதே படைப்பு, மற்ற இதழ்களில் வெளியாகி விட்டது என்று தெரிந்தால், எங்களுக்கு அனுப்பப்பட்டதை, 'கில்' செய்து விடுவோம்! 'ரிட்டர்ன் ஸ்டாம்ப்' இருந்தால், திருப்பி அனுப்பி விடுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !