அந்துமணி பதில்கள்!
* எஸ். ஜெய்கணேஷ், திண்டுக்கல்:'கொரோனா'வுக்கு மருந்து கண்டுபிடிப்பது சாத்தியமா?நம் முன்னோர் கண்டுபிடித்த, ஆயுர்வேதத்தில் மருந்து இருக்கிறதே! கஷாயம், மாத்திரைகள் மூலம் ஆறே நாளில் விரட்டி அடித்து விடுகின்றனராம்!சில பணக்காரர்கள் மட்டும், 'மொத்தமே, 1,500 - 1,600 ரூபாய் தான் வாங்குகிறீர்கள்... உங்கள் மருத்துவத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை...' என, 'டிஸ்சார்ஜ்' ஆகி சென்று விடுகின்றனராம்!நவநீலராய், சென்னை: டிபன் சாப்பிட்ட பின், காபி சாப்பிடுவது - காபி சாப்பிட்ட பின், டிபன் சாப்பிடுவது... எது சுவையானது?என் அனுபவத்தில் இரண்டுமே சுவையானது அல்ல... தோசை, 'ஆர்டர்' செய்யும்போதே, காபியும் எடுத்து வரச்சொல்ல வேண்டும். தோசை ஒரு வாய் போட்டு, காபி ஒரு மடக்கு சாப்பிடுவது, சுவையாக இருக்கும்! * வே. உமா, விழுப்புரம்: பத்தாம் வகுப்பிற்கு, 'ஆல் பாஸ்' போட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?வேறு வழி என்ன சொல்லுங்கள், இப்போதைய நிலவரத்தில்; அரசின் முடிவு சரி தான் என, நினைக்கிறேன்! மனோகர், கோவை: 'கொரோனா ஒழியும் நாள், கடவுளுக்குத் தான் தெரியும்' என்று, முதல்வர் இ.பி.எஸ்., கூறுகிறாரே... அதன் அர்த்தம் என்ன?கடவுள் எதிர்ப்பு இயக்கமான, தி.க., வீரமணியின், 'சைடு' அவர் இல்லை என்பதை, மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார்!கே.ஆர். ரவீந்திரன், சென்னை: கட்சிக்கு உழைத்தவர்கள் பலர் இருந்தும், சில தலைவர்கள், வாரிசுகளுக்கு முக்கியத்துவம் தருவது ஏன்?'சம்பாதித்த' பணம், அவர்கள் குடும்பத்துடனேயே இருக்க வேண்டும் என்பதால் தான்!ஜோ. ஜெயக்குமார், சிவகங்கை: ஜாதக பொருத்தம் பார்க்காமல் அல்லது பொருத்தம் இல்லாமல் இருந்தால், திருமணம் பண்ணலாமா?எனக்கு தெரிந்த முதியவர் ஒருவர், தன், 90வது வயதில், சமீபத்தில் இறந்தார்; பிராமணர். மனைவியின் ஜாதகத்தை வாங்கி, தன் ஜாதகத்தை அதற்கு ஏற்றார் போல் மாற்றி, திருமணம் செய்து கொண்டார். ஐந்து மகன்கள், இரண்டு பெண்களை பெற்றெடுத்தார், அவர் மனைவி. இவர்கள் அனைவருக்கும், அதே பாணியை பின்பற்றினார். எள்ளு பேரனை பார்த்த பின்பே இறந்தார்.ஜாதகம் தேவையா..