அந்துமணி பதில்கள்!
இரண்டு முறை, லென்ஸ் மாமாவுடன் சீனா சென்று, பயணக் கட்டுரை எழுதி, நம் இதழில் வெளிவந்து விட்டதே... 'தாமரை பிரதர்ஸ்' வெளியீட்டாளர்களிடம் புத்தகமாக வாங்கி படியுங்கள்!ஆமாம்... அப்படி செய்வதால், கடினமான காரியங்கள் கூட எளிதில் முடியும்! நேரத்தோடு செயல்படுவது வாழ்க்கையின் வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும்!நீங்களும் இதே வழியை உங்கள் நண்பரிடம் பின்பற்றுங்களேன்... அவர், உங்களிடம் வர மாட்டார்! அவனது நாக்கால் வருகிறது. அவன் பேசும் சொற்களால் வருகின்றன. தவறான சொற்களைப் பேசுவதிலிருந்து தன்னைக் காத்துக் கொண்டால் கெட்டது எதுவும் வராது!ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவித்தவருக்கு, அவரின் இந்த ஜென்மத்தில், அ.தி.மு.க., அலுவலகத்தில் நுழையும் வாய்ப்பு கிடைக்காது! இப்போது புரிந்திருக்கும் அவரது நடை பயணத்தின் பலன் என்ன என்பது...உங்கள் நண்பர் கொடுக்கும் பண்டங்களால் அவர்கள் மகிழவில்லை... அவரின் அகம் மகிழ்ந்து, முகம் மலர்வதாலேயே உப்பில்லாத கூழ் கொடுத்தாலும் மகிழ்கின்றனர்!