உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

*தி.முருகானந்தம், புதுப்பாளையம்: நீங்கள் எதுவரை படித்துள்ளீர்கள்?உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் அளவில்... சிறுகதை, தொடர்கதை, புதுக்கவிதை எழுத, இனிமேல் தான் படிக்க வேண்டும்!***** எஸ்.யோகராஜன், சேத்தியா தோப்பு: தமிழன் முன்னேற இப் போது மிகத் தேவையானது எது, தேவையற்றது எது?பகுத்தறிவது, தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களை அடை யாளம் கண்டு கொள்வது, கொடி பிடித்து, கோஷம் போட்டு, போஸ்டர் ஒட்டி, ஊர்வலம் போய் நேரத்தை வீணாக்குவது!****கே.வைத்தியநாதன், புதுச்சேரி: என்ன சார்... 'அந்த' மாதிரி சர்வேக்களுக்கு பஞ்சம் வந்து விட்டதா? சமீப காலமாக, 'அது' பற்றி நீங்கள் எழுதவேயில்லையே...சர்வே ரிப்போர்ட் அடிக்கடி வெளியிடுவதற்கு சீனியர் சிட்டி சன்ஸ் சிலர் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்ததால், நிறுத்தி இருந்தேன்... நீங்கள் ஓவராக கவலைப்படுவதால், இதோ தென் கொரிய சர்வே ஒன்று... தென் கொரிய ஆண்களில், நூறு பேரில், 27 பேர், தம் வாழ்நாளில், ஐந்து முதல் 12, 'செக்ஸ் பார்ட்னரை' வைத்திருந்ததாகவும், இதுவே, பெண்களில் வெறும், இரண்டு முதல் நான்கு, 'செக்ஸ் பார்ட்னர்கள்' இருந்ததாக, 39 சதவீத பெண்களும் தெரிவித்துள்ளனர்.****எம்.நாராயணமூர்த்தி, கடலூர்: கூட்டு குடும்பம். இதில் பிரிவினைக்கு இடமே இல்லாதபடி சொத்து இணைக்கப் பட்டுள்ளது. ஒரு ஆசாமி, ஒரு குழந்தையோடு நிறுத்திக் கொள் கிறார். மற்றவர் களோ, தலா, 6 - 7 பெற்று தள்ள... வருமானத்தில் முக்கால்வாசி பகுதியை அவர்களே தின்று தீர்த்து விடுகிறவர்களாக வைத்துக் கொள்வோம். இப்படிப் பட்ட குடும்பத்தில் - ஒன்றே ஒன்று பெற்றவன், பிரிந்து போய், சுக வாழ்க்கையை அனுபவிக்கலாமென சர்வ சாதாரணமாக நினைத்து விடுகிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையில், உங்களை நடுவராக போட்டு, பிரச்னைக்கு விடிவு காண வைத்தால், எப்படி தீர்மானிப்பீர்கள்?சிக்கலோ, குழப்பமோ இல்லை. சொத்தில் இருந்து வரும் வருமானத்தை சரி சமமாக பிரித்துக் கொடுத்து விட வேண்டியது தான். அவரவர் பங்கில் அவரவர் செலவு. இதில், வரவுக்காக உழைப் பவர்களுக்கு தனியே சம்பளமும் கொடுத்து விட்டால் பிரச்னை, 'சால்வ்ட்!'***** எஸ்.நாதன், விழுப்புரம்: நேர்மையான வழியில் உழைத்தும், முன்னேற முடியவில்லை. வகுத்த பாதை தவறா?இருக்கலாம்... கல் உடைத்து சம்பாதிப்பதும், நேர்மையான உழைப்பு தான்; ஆனால், நாலு காசு பார்க்க முடியாதே!***சி.ராமன், மதுரை: நான் ஒரு ஓட்டுனர். கஷ்டப்பட்டு உழைக் கிறேன். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. அப்படி இருந்தும், பத்து ரூபாய் கூட மிஞ்சவில்லை. இதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்...தொழிலை மாற்றுங்கள்... சொந்த மாக வண்டி வாங்கி ஓட்ட, வங்கியை நாடுங்கள்.***** ஜி.நடராஜன், திருப்பாபுலியூர்: எழுத்து மூலம் எல்லார் மனதிலும் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியுமா?எல்லார் மனதிலும் என்று கூற முடியாவிட்டாலும், பெரும்பான்மையினரிடம் முடியும். லெனின், பாரதியார், அண்ணாதுரை இவர் களெல்லாம் தம் எழுத்தால் தானே சரித்திரம் படைத்தனர். அவ்வளவு ஏன்... ஏதோ பேனா கிடைத்தது என எழுத ஆரம்பித்த என்னால் கூட, சிலரின் மனதில் நல்ல மாற்றங்களை கொண்டு வர முடிந்துள்ளதே!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !