உள்ளூர் செய்திகள்

அந்துமணியின் பதில்கள்!

**கே.சீனிவாசன், விருதுநகர்: இலக்கியவாதி என்று அறிய, தேவையான ஆதாரம் என்ன?தாடி வைத்து, காவி நிற ஜிப்பா அணிந்து, அழுக்கான ஜீன்ஸ் பேன்ட் போட்டு, தோளில், ஜோல்னா பை தொங்கவிட்டு, கலைந்த தலை முடியுடன் கண்ணாடி ஒன்றும் போட்டு இருக்க வேண்டும்.****பா.மகாலிங்கம், திருத்தணி: காதலியிடம் எதை மறைக்கலாம்; எதை மறைக்கக் கூடாது?எதை வேண்டுமானாலும் மறையும்; மறைத்த விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளும்!****எஸ்.சேகர், காஞ்சிபுரம்: திருமணம் செய்து கொண்ட நண்பர்கள் எல்லாம், 'திருமணமே செய்து கொள்ளாதே...' என பயம் காட்டுகின்றனரே... என்ன செய்வது?ஒரு நண்பர் சொன்னால், பர்சனலாக ஏதோ கோளாறு எனத் தள்ளி விடலாம்... ஆனால், உங்கள் நண்பர்கள் எல்லாருமே சொல்லும் போது, ஏதோ விஷயம் இல்லாமலா இருக்கும்...****ஜெ.பிரபாகரன், கோவை: நான் இன்னும் பேயைப் பார்த்ததில்லை. என்றைக்காவது பார்க்க முடியுமா?அனுபவப்பட்ட உதவி ஆசிரியர் ஒருவரின் பதில் இதோ: 'ஆசாமிக்கு இன்னும் கல்யாணமாகல போல இருக்கு!'**** ஆர்.வேலு, புதுச்சேரி: 'வேலை கிடைக்கவில்லை!' எனக் கூறி, 'தண்டச்சோறு' பட்டம் வாங்கித் திரியும், 'அறிவு கெட்ட' இளைஞர்களுக்கு, அந்துமணியின் அறிவுரை என்னவோ!உங்கள் கேள்வியில் கொஞ்சம் கடுஞ்சொற்களை பயன்படுத்தி உள்ளீர்கள். இருந்தாலும், பதிலும் கேள்வியிலேயே உள்ளது. ****என்.ராஜசேகரன், விருத்தாசலம்: அரசியல் தொண்டர்கள், நடிகரின் ரசிகர்கள், சாமியாரின் பக்தர்கள் - யார் மடையர்கள்?ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரில்லை. இந்த மூன்று, 'கேட்டகிரி' ஆளுங்களும் நீங்கள் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களே!***** எம்.அருணாசலம், ஊட்டி: பத்து மாதங்களாக நான் பூஜித்து வந்த பெண் (இப்போது என் கண்களுக்கு பேய்) வேறொரு பையனை ரொம்ப ஆழமாக காதலிக்கும் செய்தி எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது. நான் தாடி வளர்த்து, சாராயம் குடிக்கவா? உங்கள் யோசனைக்குக் கட்டுப்படுகிறேன்...உங்கள் கடிதப்படி, நீங்கள் தான் பூஜித்து இருக்கிறீர்கள்... அந்தப் பெண் இல்லை எனத் தெரிய வருகிறது... தவறு உங்கள் மீது தான். தாடியும் வேண்டாம்... சாராயமும் வேண்டாம்... உங்களை நேசிக்கும் பெண்ணாகத் தேட ஆரம்பியுங்கள்... அதற்கான எல்லாத் தகுதிகளையும் நீங்கள் அடைந்து விட்டீர்களா என்பதை முதலில் சிந்தித்துக் கொண்டு!****கே.உஷா, உடுமலைப்பேட்டை: பெண் தோழிகளுடன், 'டேட்டிங்' வைத்துக் கொண்ட அனுபவம் உண்டா?எங்கே... பெண்களுடன் பேசுவது என்றாலே, 'சரக்கு' சாப்பிட்டவன் பேசுவது போன்று நாக்கு குழறுகிறது; கை - கால்கள் தந்தி அடிக்கின்றன... இந்த அழகில் டேட்டிங்காமே.... டேட்டிங்!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !