வெளிநாடு சுற்றுலா செல்லப் போகிறீர்களா?
விமானப் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை படிப்படியாக திட்டமிட வேண்டும். நீங்கள் செல்லவிருக்கும் வெளிநாட்டில், எதிர்கொள்ளக்கூடிய பிரச்னைகளை, முன்கூட்டியே தெரிந்து கொள்வது அவசியம்.உங்கள் பாஸ்போர்ட், குறைந்தது ஆறு மாதங்கள் செல்லத் தகுந்ததாக இருக்க வேண்டும். ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு, பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து குடியேற்ற அனுமதி அதாவது, விசா தேவை.உங்களுடைய ஒவ்வொரு, 'பேக்கேஜ்'களையும் உங்களுடைய மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். இது, பெட்டிகள் மாறினாலோ, காணாமல் போனாலோ திரும்ப கிடைக்க உதவும்.ஒவ்வொரு விமான நிறுவனமும், வாடிக்கையாளர் சேவை திட்டங்களை பற்றி, அவர்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கும். அதை பார்த்து, விமான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது சிறந்தது.முகவர்கள் அல்லது விமான நிறுவனத்தால் பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டாலும் கூட, டிக்கெட்டில் பெயர், பயணத்தேதி, புறப்படும் இடம் மற்றும் சென்று அடையும் இடம் ஆகியவை சரியாக இருக்கிறதா என, சரி பார்ப்பது நல்லது.விசா உள்ள சரியான பாஸ்போர்ட்டை எடுத்துச் செல்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். துணை பாஸ்போர்ட் வழங்கப்பட்டிருந்தால், அதற்கு முந்தைய அனைத்து பாஸ்போர்ட்டுகளையும் எடுத்துச் செல்ல வேண்டும்.விமான பயணத்திற்கு, மூன்று நாட்களுக்கு முன்னதாகவே, உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ள, 'விட்டமின் சி' உள்ள உணவுகளை சாப்பிடவும். வீட்டில் உள்ள கிருமிகளை விட, விமானத்தின் உள்ளே இருக்கும் காற்றில் அதிக கிருமிகள் இருக்கும்.விமான பயணத்தின் போது, காலணிகளை கழற்றாதீர்கள். குறைந்த காற்றழுத்தம் காரணமாக, பாதங்கள் வீங்கிப் போகலாம்.வெளியூர் செல்லும் போது, ப்ரிஜ்ஜை, 'சுவிட்ச் ஆப்' செய்து, அழுத்தமாக மூடாமல், இடைவெளி விட்டு கதவுக்கும், ப்ரிட்ஜுக்கும் இடையே, சிறிய கட்டையோ அல்லது காகிதத்தை பந்து போல உருட்டியோ வைக்கலாம். காற்றோட்டம் கிடைக்கும்.பாத்திரங்களை கழுவி, உலர்த்தி, சுத்தமான துணி மீது கவிழ்த்து வைத்து, இன்னொரு துணியை போட்டு மூடிவிட்டால், பாத்திரங்களுக்குள் பூச்சி எதுவும் போகாமல் இருக்கும்.வங்கிகளில், நிரந்தர வைப்பு தொகைகளின் கால அளவு, டூர் முடிந்து திரும்பி வருவதற்குள் முடிவடைகிறதா என்பதை, உறுதி செய்து கொள்ளுங்கள்; இல்லாவிடில், முன்னேற்பாடுகளை செய்து கொள்வது அவசியம்.காஸ் ஸ்டவ்வின், ரெகுலேட்டரை கழற்றி, சிலிண்டரின் வாயை மூடி, காற்றோட்டமான இடத்தில் வைத்து விடவும்.