உள்ளூர் செய்திகள்

கைதான கிளி ! ஜே.கே.அருள்தாஸ்

போலீசாரைப் பார்த்ததும், 'ஓடு, ஓடு' என குரல் எழுப்பிய தந்திரகார கிளியை, போலீசார் கைது செய்தனர். இந்த நூதன சம்பவம், கொலம்பியா நாட்டில் நடந்துள்ளது. போதைப்பொருள் கடத்தலில் சர்வதேச அளவில் கொடி கட்டி பறக்கும் நாடு கொலம்பியா. உலகம் முழுவதற்கும், இந்த நாட்டில் இருந்து தான் போதைப் பொருட்கள் சப்ளை செய்யப் படுகின்றன. கொலம்பியாவின் போதை சாம்ராஜ்யத்தை பார்த்து அமெரிக்காவே நடுங்குகிறது.இந்த நாட்டில் உள்ள போதை கடத்தல் கும்பல், போலீசிடம் இருந்து தப்பிக்க, பல நூதன வழிகளை பயன்படுத்துகின்றனர். போலீஸ் வருவதை முன் கூட்டியே தெரிவிக்க, கிளிகளை வளர்த்து, பயிற்சி கொடுக்கின்றனர்.இந்த நாட்டில் கடற்கரை  ஓர நகரமான பாரன்குயிலா நகரில், போதை கும்பல் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதில் ஒரு கும்பல், போலீசாரின் வருகையை மோப்பம் பிடிக்க, கிளிகளை வளர்க்கின்றனர். சீருடையுடன் சிவப்பு விளக்கு பொருத்திய வாகனத்தில் போலீசார் வந்தால், உடனே இந்த கிளி, 'ஓடு, ஓடு, உன்னைப் பிடிக்க பூனை வருகிறது...' என குரல் கொடுக்கும். இந்த கிளியின் பெயர் லோரன்சோ.  சமீபத்தில், ஒரு மறைவிடத்தில் போலீசார் சோதனையிட சென்ற போது, இந்த கிளி, குற்றவாளிகளை உஷார் படுத்தியது. உடனே மறைவிடத்தில் இருந்த சிலர் ஓட்டம் பிடித்தனர். அவர்களில் இரண்டு பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் விசாரித்ததில் கிளியின் சேட்டை அம்பலமானது. உடனே, அந்த கிளியையும் போலீசார் கூண்டோடு கைது செய்து வேனில் ஏற்றினர்.பின்னர் மறைவிடத்தில் சோதனை செய்து போதை பொருட்கள், ஆயுதங்கள், மேலும் இரண்டு கிளிகளை கைப்பற்றினர். அந்த பறவைகள், பறவை கண்காட்சி அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டன.         ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !