துணிச்சல்கார எழுத்தாளர் அருந்ததிராய்!
எழுத்தாளர் அருந்ததிராய், சமீபத்தில் காந்திஜியை விமர்சனம் செய்து பேசியதால், இவரை கைது செய்ய வலியுறுத்தி காங்., காட்சியினர் கோஷம் போட்டு வருகின்றனர். கேரளாவில் தலித்துகள் பொது வழியில் நடமாடவோ, கல்வி கற்கவோ அனுமதி இல்லாத போது, அதை எதிர்த்து போராடி, அவர்கள் அந்த உரிமைகளை பெற காரணமாக இருந்தவர் அய்யங்காளி. அதைக் குறிப்பிட்டு பேசிய அருந்ததிராய், 'கல்விக்காக பாடுபட்ட அய்யங்காளி பெயரில் ஒரு பல்கலைக்கழகமாவது உண்டா... எங்கு பார்த்தாலும் காந்திஜி பல்கலைக் கழகத்தைத் ன் காண முடிகிறது. ஆரம்ப காலத்தில், காந்திஜி தலித் விரோதியாக இருந்தார்...' என்று பேசினார். பல்கலைக்கழகத்துக்கு அய்யங்காளி பெயரைச் சூட்ட வேண்டும் என்பதில் நியாயம் இருந்தாலும், காந்திஜியை பற்றிய விமர்சனத்தை தவிர்த்து இருக்கலாம்.— ஜோல்னாபையன்.