உள்ளூர் செய்திகள்

துறவிகளுக்கு விழிப்புணர்வு தேவை!

தாய்லாந்தில், பெரும்பாலான புத்த துறவிகள், அதிகமாக உண்டு, உடற்பயிற்சி இன்றி வாழ்வதால், உடல் எடை அதிகரித்து, குண்டாகி விடுகின்றனர். இதனால், 45 சதவீதம் பேர், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் மற்றும் கொழுப்புகளால் அவதிப்படுகின்றனர்.இவர்களின் ஆரோக்கியத்துக்காக, ஆண்டுக்கு, 85 லட்சம் டாலர் செலவு செய்து வருகிறது தாய்லாந்து அரசு. அரசின் முயற்சியால், தற்போது துறவிகள் மத்தியில், உடல் ஆரோக்கியம் பற்றி, விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !