உள்ளூர் செய்திகள்

நாத்திக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்!

காலில் முள் குத்தினாலே, வலியில், எல்லா கடவுள்களையும் உதவிக்கு அழைப்போருக்கு மத்தியில், 20 வயதில், மோட்டோர் நியூரான் என்ற நோய் தாக்குதலுக்கு உள்ளாகி, வலது கையின் இரு விரல்கள் மற்றும் மூளையின் செயல்பாட்டுடன் மட்டுமே, 75 வயது வரை வாழ்ந்து வரும், ஸ்டீபன் ஹாக்கிங், கடவுள் இல்லை என்று சவால் விட்டு, வாழ்ந்து வருகிறார்.தானியங்கி சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி, விஞ்ஞான சிந்தனைகளால், உலகை வியக்க வைக்கும் இவர், ஊனமுற்றவர் என்று, மூலையில் முடங்கி விடவில்லை. சீனா பெருஞ்சுவரை சுற்றிப் பார்ப்பது, நீர் மூழ்கி கப்பலில், கடலுக்கு கீழே பயணிப்பது என்று, எப்போதும், சுறுசுறுப்பாக இயங்குகிறார்.'வேற்று கிரகவாசிகள் இருக்கின்றனர்; அவர்கள் பூமிக்கு வருகின்றனர்...' என்று கூறும் இந்த நாத்திக விஞ்ஞானியின், ஆசை என்ன தெரியுமா... விண்வெளியில் பயணம் செய்ய வேண்டும் என்பதே!— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !