உள்ளூர் செய்திகள்

வெற்றிலை!

* வெற்றிலையுடன், மிளகை அரைத்து, பாக்களவு உட்கொண்டு, பின், வெந்நீர் அருந்தினால், எல்லா விஷங்களும் முறியும்.* உடலில் அதிக வெப்பத்தையும், வலியையும் நீக்கும் குணம், வெற்றிலைக்கு உண்டு.* வெற்றிலையுடன், சிறிது உப்பை மடித்து சாப்பிட்டால், வயிற்றில் ஏற்படும் குத்து வலி நீங்கும்.* வெற்றிலை சாறும், தேனும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, தினமும் இருவேளை அருந்திவர, உடல் பலவீனமும், நரம்பு தளர்ச்சியும் நீங்கும்.* வெற்றிலையுடன், சம அளவு ஓமம் சேர்த்து, இடித்து, பிழிந்து, அச்சாற்றை தேன் கலந்து பருகினால், வயிற்றுப் பொருமலுடன் கூடிய வயிற்றுப் போக்கு நிற்கும்.*கடுமையான தலைவலி இருந்தால், வெற்றிலையை அரைத்து பத்துப் போட்டால், தலைவலி நீங்கும்.* குழந்தை பெற்ற தாய்க்கு அதிகமாக பால் சுரக்க, வெற்றிலையை, சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி, மார்பில் வைத்து கட்ட, பால் சுரக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !