பிட்ஸ்(ஸா)
நீங்கள் காபி பிரியரா... காபி என்றால், உங்களுக்கு காமமா... காமாந்தக்காரர் மாதிரி, நீங்கள் ஒரு காபியாந்தகாரரா... உங்கள் காபி மோகத்தை தணித்துக் கொள்ள, இதோ ஒரு சுலப வழி! காபி நிரம்பிய டம்ளரை, எதிரே வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு ஸ்பூனை எடுத்து, டம்ளரிலிருந்து, ஒரொரு ஸ்பூனாக எடுத்துப் பருகுங்கள். முழு டம்ளர் காபியையும், ஸ்பூன் ஸ்பூனாக சாப்பிட்டால், சாப்பிட்டு முடிவதற்குள், சத்தியமாக காபி மீது, உங்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு விடும். மேலும், ஸ்பூனால் காபி அருந்தும் போது, நம் சுதந்திரம் பறி போய், (கடகட என்று குடிக்கும் சுதந்திரம்) நம்மை நாமே கட்டுப்படுத்துகிறோம். இப்படி, நமக்கு நாமே கட்டுப்பட்டு பழக வேண்டும். சிறிது சிறிதாக கட்டுப்பட்டு பழக, ஸ்பூன் காபி, சிறந்த கட்டுப்பாட்டுப் பயிற்சி. கீதையில் பகவான் கிருஷ்ணர், இதைத் தான், 'சனை சனை' (மெதுவே மெதுவே) என்கிறார்.— பாக்கியம் ராமசாமி.