உள்ளூர் செய்திகள்

பிட்ஸ்(ஸா)

அக்காலத்தில், மனைவிகளை, சில புருஷர்கள் பக்தியின் பெயரால் ரொம்பத் தான் கொடுமைப்படுத்தியிருக்கின்றனர். கலிக்கம்ப நாயனார் என்பவர் தினமும், ஒரு சிவனடியார் பாதத்தை கழுவி, பூஜை செய்த பின் தான், உண்ணுவது என்ற விரதம் வைத்துக் கொண்டிருந்தார். அடியாரின் பாதத்தை கலிக்கம்ப நாயனார் கழுவ, அவரது பத்தினியார், நீர் ஊற்றி உதவி செய்வார். ஒரு நாள், ஒரு கபட அடியார் வந்து சேர்ந்தார். அந்த அடியார், கலிக்கம்ப நாயனார் வீட்டில், ஒரு காலத்தில் வேலைக்காரனாக இருந்து, வேலையிலிருந்து நீக்கப்பட்டவர். இப்போது சிவனடியாராக வேடம் தரித்து, பழைய எஜமானரின் பாத சேவையை பெற வந்திருந்தார். (எஜமானன் தன் பாதத்தை கழுவட்டுமே என்ற குரூர மகிழ்ச்சி.)நீர் ஊற்றிக் கொண்டிருந்த கலிக்கம்ப நாயனாரின் மனைவிக்கு, அவனை அடையாளம் தெரிந்து விட்டது. ஆனால், கலிக்கம்ப நாயனாருக்கு தெரியவில்லை. மனைவி நீர் ஊற்ற தயங்கி, சிறிது நிறுத்தினார். 'அடியார் சேவையில் தாமதமா...' என்று கோபித்த கலிக்கம்பர், மனைவியின் கையை துண்டித்து விட்டார்.ஆமாம்... இந்த வித பக்திக்கு என்ன பெயர்?— பாக்கியம் ராமசாமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !