பிட்ஸ்(ஸா)
மனிதனுக்கு மாற்றுக் காற்று என்பது, ஒரு சிறந்த வைத்தியம். ரவீந்திரநாத் தாகூரின் நாவல் ஒன்றில், இத்தகைய மாற்றுக்காற்றுக்காக ஜமீன்தார் ஒருவர், ஒரு பெரிய படகில், தன் அரண்மனை சிப்பந்திகளுடன் ஆற்றிலே பயணித்தார் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரே இடத்திலிருந்து எத்தகைய சிகிச்சை எடுத்துக் கொண்டாலும், ஆரோக்கியம் திரும்பாது. புதுக் காற்றை நாடி வேறு எங்காவது பயணிப்பது நல்லது. நாமெல்லாம் ராஜாவா, ஜமீன்தாரா? உல்லாசப் படகும், பயணமும் சுலபத்தில் கிடைக்க! கோவில், குளம் என்று முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கிற இடத்திற்கு சென்று வருவதே, நமக்கெல்லாம் மாற்றுக் காற்றுக்கு வழி.— பாக்கியம் ராமசாமி.