பிட்ஸ்(ஸா)
வாசல் கேட்டைத் திறந்தபடி உள்ளே வருகிறவர்களில், எத்தனை பேர் போகும்போது சாத்திவிட்டுப் போகின்றனர்? அறையின் ஜன்னலோரத்தில் அமர்ந்து கவனித்ததில், பத்துப் பேர் வந்தால், எட்டு பேர் கதவைத் திறந்துபோட்டு விட்டுத்தான் போகின்றனர். வந்த காரியத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு போகிறவர்கள், (கேட்ட கடன் கிடைத்தாலோ, எழுதி வந்த கதையைப் படித்துவிட்டு நன்றாயிருக்கிறது என்று பாராட்டினாலோ) ஞாபகமாக சாத்திக் கொண்டு செல்கின்றனர். — பாக்கியம் ராமசாமி.