பாக்ஸ் மேட்டர்
புது மிருகம் - சிறுத்தையா, புலியா? ஆராய்ச்சியாளர்கள் வியப்பு!சுமத்ரா தீவு காடுகளில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள புதுவகை மிருகம் ஒன்று, ஆராய்ச்சியாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. புலி போன்றும், சிறுத்தை போன்றும் காணப்படும் அந்த மிருகத்திற்கு என்ன பெயர் வைப்பது என, இன்னும் முடிவு செய்யப்படவில்லை.மிருகங்களிலேயே மிகவும் ஆக்ரோஷமானதாக கருதப்படு பவை சிறுத்தை மற்றும் புலி. உடல் முழுவதும் புள்ளிகள், கோடுகளுடன் காணப்படும் இந்த வகை மிருகங்கள் ஆசிய காடுகளில் அதிகம் காணப் படுகின்றன.இந்த இரண்டு மிருகங்களின் கலவை போல் காணப்படும் மிருகம் சமீபத்தில் சுமத்ரா, பொர்னியோ காடுகளில் காணப்பட்டன. புலியைப் போன்ற முகத்துடனும், சிறுத்தை போன்ற உடல் அமைப்புடனும் உள்ள இந்த வகை மிருகம் எப்படி உருவானது என ஆராய்ச்சி யாளர்களை குழப்பியுள்ளது. இந்தோ னேசியா நாட்டில் சுமத்ரா காடுகளில் மிருக ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சி யாளர்களின் கேமராவில் இந்த மிருகத்தின் நடமாட்டம் பதிவானது. ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் உள்ள லிப்னிஸ் காட்டு மிருக ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆன்ட்ரஸ் வில்டிங் தலைமையிலான குழு, இந்த மிருகம் குறித்த தீவிர ஆராய்ச்சியில் இப்போது ஈடுபட்டுள்ளது.'நகரங்கள் பெருகி வருவதால், காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளில் வெவ்வேறு இடங்களில் தனித்தனி குழுக் களாக வசித்த மிருகங்கள், இப்போது ஒரே இடத்தில் அருகருகே வசிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படு கிறது. இதன் காரணமாக, இவ் வாறு புதுப்புது கலப் பின மிருகங்கள் தோன்றுகின்றன...' என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 'வெளி உலகத்திற்கு தெரியாமலேயே பல வித மிருகங்கள் காடுகளில் வசிக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது...' என, வேறு சிலர் வாதிடுகின்றனர். உண்மை என்ன என்பது தீவிர ஆராய்ச்சிக்குப் பின் தான் தெரிய வரும்.— ஜோல்னா பையன்.பாம்பு வீடு விற்பனைக்கு!அமெரிக்காவில், ஒரு வீட்டிற்குள் திடீரென ஆயிரக்கணக்கான பாம்புகள் படையெடுத்துள்ளன. பயந்து போன அந்த வீட்டின் உரிமையாளர், அந்த வீட்டை அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டார். அந்த வீட்டிற்கு கடன் கொடுத்த நிறுவனம், இப்போது அந்த வீட்டைக் கைப்பற்றி, விற்பனைக்கு விடப்படும் என அறிவித்துள்ளது.அமெரிக்காவில், இதகோ மாநிலத்தில் காட்டுப் பகுதியை ஒட்டி இந்த வீடு உள்ளது. ஐந்து படுக்கை அறைகளைக் கொண்ட இந்த வீட்டிற்குள், சமீபத்தில், திடீரென ஆயிரக்கணக்கான பாம்புகள் குடியேறின. அவற்றை விரட்ட வீட்டின் உரிமையாளர் என்னென்னவோ முயற்சி செய்தும் பலன் இல்லை. பாம்புகள் நிரந்தரமாக அங்கு தங்கி விட்டதால், அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.இப்போது அந்த வீடு, 29 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய்க்கு விற்க தயார் என அந்த வீட்டைக் கைப்பற்றிய வங்கி அறிவித்துள்ளது. முதலில் அந்த வீட்டின் விலை, 78 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப் பட்டிருந்தது. பாம்பு வீட்டை யாருமே வாங்க முன் வராததால், வீட்டின் விலை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், யாரும் இந்த வீட்டை வாங்க தயார் இல்லை.விஷத்தன்மை இல்லாத இந்த பாம்புகள், அமெரிக்கா முழுவதும் காணப்படுகின்றன. ஆனால், ஏன் இந்த வீட்டில் மட்டும் ஒட்டுமொத்த மாக குடியேறியுள்ளது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. — ஜோல்னா பையன்.