துணிச்சல்கார திருநங்கை!
கேரள மாநிலத்தில் உள்ள எடமுட்டத்தில் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர், சுஜித்குமார்; காலிகட் பல்கலையில் பி.எஸ்சி., செவிலியர் பட்டம் பெற்ற திருநங்கையான இவர், இந்தியா முழுவதும் வேலை தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில், சவுதி ராணுவ மருத்துவமனையில் வேலைக்கு சேர்ந்தார். சில ஆண்டுகள் கடந்தபின், புதிதாக வந்திருந்த கர்னல் ஒருவர், இவருடைய சான்றிதழ்களை பார்த்த போது, திருநங்கை என்று அறிந்து, இவரை பணி நீக்கம் செய்தார்.தாயகம் திரும்பியவர், தன்னுடைய பெரிய வீட்டில், துணைக்கு யாரும் இல்லாத நிலையில், 10 நாய்களை வளர்ந்து வருகிறார். 'திருநங்கையாக பிறந்தது என் குற்றமா?' என்று கேட்கும், 48 வயது சுஜிக்குமார் என்ற சுஜியை, சுவிஸ் நாட்டை சேர்ந்த கோட் என்ற வாலிபர், வாழ்க்கை துணையாக்க விரும்பிய போது, 'நாய்களையும், நண்பர்களையும் விட்டு வர முடியாது...' என கூறிவிட்டார், சுஜி!— ஜோல்னாபையன்.