உள்ளூர் செய்திகள்

பட்ஜெட் டூர் ஸ்பார்ட்ஸ்!

மடிகேரி!கர்நாடகா மாநிலம், கூர்க் மாவட்டத்தில் உள்ளது, மெர்க்காரா. இங்கிருந்து அழகிய பள்ளத்தாக்குகளை பார்த்து, ரசிக்கலாம். மடிக்கோடி கோட்டை சுற்றுலா பயணிகளை கவர கூடியது; நகருக்குள் அமைந்த, ஓம்காரே ஸ்வரர் ஆலயம் பிரசித்தி பெற்றது.அதிரப்பள்ளி வாட்டர் பால்ஸ்!புதுவித அனுபவத்துடன், அருவியை காண விரும்பு வோருக்கு அதிரப்பள்ளி வாட்டர் பால்ஸ், பெஸ்ட் சாய்ஸ். கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள, சாலக்குடி தாலுகாவில், இந்த அருவியை காணலாம்.'இந்தியாவின் நயாகரா...' என, செல்லமாக அழைக்கப் படும் இதன் உயரம், 80 அடி; நடிகர் கமல்ஹாசன் நடித்த, புன்னகை மன்னன் படம், இங்கு தான் எடுக்கப்பட்டது. அதன்பின், தமிழகத்தில் இந்த அருவி, 'புன்னகை மன்னன் அருவி...' என்றே அழைக்கப்படுகிறது.மேலும், இருவர் படத்தில் வரும், 'நறுமுகையே...' பாடலிலும், ராவணன் படத்திலும் இந்த அருவி இடம் பெற்றுள்ளது. ஜூன் முதல் செப்டம்பர் வரை நீர் வரத்து நன்றாக இருக்கும் என்பதால், அப்போது இங்கு செல்வது சிறந்தது.ஜவ்வாது மலை!திருவண்ணாமலை மாவட்டத்தில், கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ளது, ஜவ்வாது மலை. இங்கு, பீமா அருவி மற்றும் ஆசியாவிலேயே மிகப் பெரிய வானிலை ஆராய்ச்சிக்கூடமான காவலூர் கோளரங்கு போன்றவை பார்க்கக் கூடிய இடங்கள். மேல்பட்டு ஊரில், ஆங்கிலேயரால் கட்டப்பட்ட கண்ணாடி மாளிகை மற்றும் மூலிகை பண்ணைத் தோட்டம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. அரசு விடுதிகள், தனியார் தங்குமிடங்களும் உள்ளன. ஜவ்வாது மலை அருகே தான் ஏலகிரியும் இருக்கிறது.இங்குள்ள புங்கனுார் அருவியில், படகு சவாரி செய்யலாம்; இங்கு வேலன் கோவில் மற்றும் லிங்க வடிவில் முருகன் கோவில் ஒன்றும் உள்ளது. வாரியார் சுவாமிகள், குடமுழுக்கு செய்த கோவில் இது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் பேருந்துகள் இயங்குகின்றன. அரியலூர்!ராஜராஜ சோழனின் மகன், முதலாம் ராஜேந்திர சோழன், தன் வெற்றியின் சின்னமாக கட்டிய, கங்கை கொண்ட சோழபுரம் கோவில், அரியலூரில் உள்ளது. தஞ்சை பெரிய கோவிலை பார்த்து பரவசப்பட்ட கண்கள், நிச்சயம், இதையும் ரசிக்கும். இதற்கு பக்கத்திலேயே தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, மாளிகை மேடு உள்ளது. இது, தரைமட்டமாக்கப்பட்ட, ராஜேந்திர சோழனின் அரண்மனைப் பகுதி. வரலாற்றின் மிக முக்கிய தடயம் இது. ஆலப்புழா! படகு சவாரி என்றாலே, கேரளாவிலுள்ள ஆலப்புழா தான் நினைவுக்கு வரும். தென் கேரளாவிலுள்ள, ஆலப்புழாவில், அழகிய கடற்கரை, இயற்கை அழகு நிறைந்த உப்பங்கழிகள், மிக அமைதியான ஏரி மற்றும் ரம்மியமான படகு வீடு பயணம் போன்றவை, மறக்க முடியாதவை.சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும், ஆலப்புழா படகு போட்டி, உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவின், பல இடங்களில் இருந்து ரயில் மூலமாக, ஆலப்புழாவை சென்றடையலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !