உள்ளூர் செய்திகள்

ஒட்டக கறி - ஆஸ்திரேலியா முதலிடம்!

ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களின் எண்ணிக்கை வியக்க வைக்கும் அளவிற்கு அதிகரித்து வருகிறது. இங்கு, ஒட்டகங்கள் எப்படி வந்தது?கடந்த, 1900ல், ரயில் தண்டவாளங்கள் அமைக்க, இங்கு வந்தனர், ஆப்கானிஸ்தானியர்கள். இந்த வேலையில் ஈடுபடுத்த ஒட்டகங்கள் அழைத்து வரப்பட்டன. வேலை முடிந்த பின், ஒட்டகங்களை அங்கேயே விட்டுச் சென்று விட்டனர். அதன்பின், ஒட்டகங்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டதால், அதன் இறைச்சியை விற்பனை செய்யலாம் என்று, அரசு முடிவு செய்தது. ஒட்டக இறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இன்று, ஆஸ்திரேலியா முக்கிய இடம் வகிக்கிறது. இங்கு, 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஒட்டகங்கள் இருப்பதாக, புள்ளி விபரம் கூறுகிறது. — ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !