தீப்பிடிக்க... தீப்பிடிக்க...
சிலர் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்களுக்கு காரணங்களை கண்டுபிடிக்க மருத்துவர்களால் கூட முடியாது. கோத்தகிரியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர், பாலக்காட்டில் ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். 14 மற்றும்13 வயதுள்ள இவர்கள் வாழ்க்கையில், சமீபத்தில் தீ உருவில் பெரும் சோகம் ஏற்பட்டது. இந்த சிறுவர்கள் எதை தொட்டாலும் அப்பொருள் தீ பிடித்து எரிகிறது. இதனால், பக்கத்து வீடுகளுக்கு கூட சிறுவர்கள் போவது இல்லை. உடலில் சூடு அதிகமானால், இருவரும் அருகில் உள்ள குளத்தில் குதித்து, பல மணி நேரம் தண்ணீரிலேயே இருப்பர். மகன்களின் இந்த நிலைமையை கண்டு தந்தை சுப்பிரமணி, பக்கத்திலேயே உட்கார்ந்து இருப்பார். இதனால், அவரால் தினமும் வேலைக்கு போக முடிவதில்லை.— ஜோல்னாபையன்.