உள்ளூர் செய்திகள்

பனி குகைகள்!

ஐரோப்பிய நாடுகளில் பனி மலைகளுக்கும், பனிக் குகைகளுக்கும் பஞ்சமே இல்லை. சில சமயம் பனி உருகி, குகையினுள் சென்று உறைந்து, மீண்டும் ஐஸ் ஆகிவிடுவதும் உண்டு.ஐரோப்பிய நாடுகளில், மிகப் பெரிய பனிப் பாறைகள் உண்டு. இவற்றில், சில இயற்கையாகவும் இருக்கும்; சில செயற்கையாகவும் ஐஸ் குகைகளை உருவாக்கி வைத்து, பார்வை யாளர்களை கவர்வதும் உண்டு. சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற சுவிட்சர்லாந்தில், இத்தகைய பனி குகைகள் ஏராளமாக உள்ளன.ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, மோன்டனா, மாடிசன் உட்பட பல இடங்களில், இத்தகைய ஐஸ் குகைகள் காணப்படுகின்றன. அதே போல, அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் உள்ள, 'பிக் போர்' மலையில், ஐஸ் குகைகள் உள்ளன. இதைக் கண்டுகளிக்க, ஆண்டுதோறும், 50 ஆயிரத்திற்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் வருகின்றனர்.பிரான்சிலும் மிகப் பெரிய பனிப் பாறை களையும், அவற்றில் குகைகளையும் காணலாம். உலகிலேயே மிகப்பெரிய க்பிளிசியர் ஐஸ் குகை, பிரான்சில் உள்ளது. மெர்டிகிலேஸ் என்ற பனிப்பாறை, ஏழு கி.மீட்டர் நீளமும் 200 மீட்டர் கனமும் கொண்டது. இதன் அடியில் தான், இந்த குகை அமைந்துள்ளது. இந்த பனிப்பாறை ஆண்டிற்கு, 90 மீட்டர் நகருவதாக கூறப்படுகிறது. அதாவது, ஒரு மணி நேரத்திற்கு ஒரு செ.மீ., நகருகிறது. முதன் முதலில், இரு ஆங்கிலேயர்கள் 1741ல் இதற்குள் விஜயம் செய்தனர். தற்போது இக்குகைக்குள், ரயில் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.இந்த ஐஸ் குகைக்குள், 100 மீட்டர் வரை சென்று, திரும்பலாம். அங்கு, ஐஸ்சிலேயே சில பொருட்களை உருவாக்கி, பார்வைக்கு வைத்துள்ளனர்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !