சோர் பஜார்!
மும்பையிலுள்ள, 'சோர் பஜார்' பிரபலமான வர்த்தக மையம். 'சோர்' என்றால், திருடன் என்று பொருள். எனவே இதை, திருட்டு சந்தை என்று சொல்கின்றனர். ஆனால், இது, 'ஷோர் பஜார்' - பரபரப்பான சந்தை என்ற பெயரில், முதலில் இருந்தது. வெள்ளையர் ஆண்டபோது, 'ஷோர்' என்று சொல்ல தெரியாமல், 'சோர்' ஆக்கி விட்டனர், நம் மக்கள். மேலும், பெயருக்கு ஏற்றபடி, காணாமல் போன, திருடப்பட்ட வாகனங்களின் உதிரி பாகங்கள் அனைத்தும், இங்குள்ள கடைகளில் விற்கப்படுகின்றன.— ஜோல்னாபையன்.