துணுக்கு மூட்டை - சினி செய்திகள்
* இளையராஜா பாடிய சித்தர் பாட்டு!'தாண்டவக்கோனே' படத்தில், ஆன்மிக சித்தர்கள் சம்பந்தப்பட்ட ஒரு பாடலின் சூழலை இளையராஜாவிடம் சொன்னதும், அதற்கான டியூனை உருவாக்கும் போதே, பாடலையும் எழுதி விட்டார். 'காட்டுவழி துன்பம் இல்லே... கல்லு முள்ளு தொல்லையில்லே... சுமைகள் எல்லாம் சுமையே இல்லே... காலம் தோறும் பயமே இல்லே...' என்ற அந்த பாடலையும், தன் சொந்தக் குரலிலேயே உருக்கமாக பாடி, யூனிட்டையே உருக வைத்து விட்டார். - சினிமா பொன்னையா.* ஜெனிலியா நம்பிக்கை'வேலாயுதம்' படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ள ஜெனிலியா, அடுத்து தனுஷûடன், 'உத்தமபுத்திரன்' படத்திலும் நடிக்கிறார். இதனால், முன்பை விட தமிழ் சினிமா மீது கூடுதல் நம்பிக்கை பிறந்துள்ளது ஜெனிக்கு. ஆக, விரைவிலேயே மும்பையை காலி செய்து விட்டு, சென்னைவாசியாகப் போகிறார். அங்கு ஏண்டி மகளே, கஞ்சிக்கு அழுகிறாய்? இங்கே வந்தால் காற்றாய் பறக்கலாம்! - எலீசா.* விக்ரம் கதை தேடல்!சேது, காசி, பிதாமகன் படங்களில் நடித்தபோது தனக்கிருந்த பெயரை, தக்க வைத்துக் கொள்ளும்பொருட்டு, அது மாதிரியான கதைகளை தேடுகிறார் விக்ரம். வழக்கமான கமர்ஷியல் கதைகளுடன் தன்னை சந்திக்கும் டைரக்டர்களிடம், மேற்படி படங்களை குறிப்பிட்டு, 'அதுபோன்ற மாறுபட்ட கதைகளாக யோசியுங்கள்... உடனே கால்ஷீட் தருகிறேன்!' என்றும் சொல்லிஅனுப்புகிறார். - சி.பொ.,* நீச்சல் உடைக்கு மாறிய ஷம்மு!காஞ்சிவரம், மலையன், மாத்தியோசி படங்களில் நடித்து வந்தபோது, கவர்ச்சி என்றாலே காத தூரத்துக்கு ஓடினார் நடிகை ஷம்மு. ஆனால், இப்போது, 'கதைக்கு அவசியமென்றால், நீச்சல் உடையில் நீந்தவும் தயார்...' என்கிறார். மாற்றத்திற்கான காரணம் கேட்டால், 'நான் யு.எஸ்.,சில் இருந்த போதெல்லாம், நீச்சல் உடையணிந்துதான் பீச்சுக்கு செல்வேன். அதேபோல், இப்போது கதைக்காக நீச்சல் உடை அணிவது எனக்கு சங்கடமாகத் தெரியவில்லை. அதுமட்டுமின்றி, கவர்ச்சிக்கு தடா போடுவது என் சினிமா வளர்ச்சிக்கு தடையாகி விடக் கூடாது என்பதும் காரணம்...' என்கிறார். வந்தளவிலே பந்தடித்தாள்; வர வர மாமி கழுதை போல் ஆனாள்! - எலீசா.* மண்வாசனையை மாற்றிய ஹரி!ஹரி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில், தமன்னா நாயகியாக நடிக்கிறார். மேலும், தொடர்ந்து நெல்லை மண்வாசனை கதைகளாக படமாக்கி வரும் ஹரி, இப்படத்தில் முதன் முறையாக, சிவகங்கை மாவட்ட கதையை படமாக்குகிறார். இதில், கோபம் மிக்க அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ். இதற்காக நீண்ட தலைமுடியும் வளர்க்கிறார். - சி.பொ.,* பேச்சுவார்த்தையில் லட்சுமிராய் !லாரன்சுடன், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பெண்சிங்கம் படங்களில் இணைந்து நடனமாடிய லட்சுமிராய், 'முனி' படத்தின் இரண்டாம் பாகமான, 'காஞ்சனா'வில் அவருக்கு ஜோடியாகி விட்டார். என்றாலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் அனுஷ்காவுக்குதான். அதனால், தன்னையும் அனுஷ்காவுக்கு இணையான நாயகியாக்குமாறு லாரன்சிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் லட்சுமிராய். அங்குசம் இல்லாத யானையும், கடிவாளம் இல்லாத குதிரையும் அடங்கா! - எலீசா.* தமிழுக்கு வருகிறார் காஜல் அகர்வால்சுசீந்திரன் இயக்கியுள்ள, 'நான் மகான் அல்ல' படத்தில் காஜல் அகர்வாலுக்கு, 'கஜினி'யில் அசின் நடித்தது போன்ற வெயிட்டான ரோல். 'ஒருவேளை அசினுக்கு அப்போது கிடைத்தது போன்ற நல்ல பெயர் எனக்கு இப்போது கிடைத்தால், மீண்டும் தமிழில் அதிக கவனம் செலுத்துவேன்!' என்கிறார் காஜல். இவர், தற்போது தெலுங்கில் அனுஷ்காவின் நம்பர் ஒன் நாற்காலியை தட்டிப் பறித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படுவது பட்டும் பட்டத்துக்கு இருக்க வேண்டும்! - எலீசா.* பரத் மவுசு குறைந்தது!சமீபத்தில் பரத் நடித்த பல படங்கள் தோல்வியடைந்து விட்டதால், அவர் நடித்துள்ள, 'திருத்தணி' படத்துக்கு பெரிய அளவு எதிர்பார்ப்பு இல்லை. இதனால், தன் சம்பளத்தை அதிரடியாக குறைத்துள்ள பரத், ஹிட் படம் கொடுத்த சில புதிய இயக்குனர்களை பட வாய்ப்புக் கேட்டு துரத்தி வருகிறார். - சினிமா பொன்னையா.