உள்ளூர் செய்திகள்

தாவரங்களால் உருவாக்கப்பட்ட உடை

விலங்குகள், பறவைகள் போன்றவற்றை, வேட்டையாடுவதை தடை செய்யும் வகையிலும், சைவ உணவு வகைகளை சாப்பிடுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சமீபத்தில், ஐதராபாத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. விலங்குகள் நல அமைப்பான, 'பீட்டா' சார்பில், இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், பங்கேற்ற பெண்கள், வழக்கமான உடைகளை அணிவதற்கு பதிலாக, தாவரங்கள், காய்கறிகள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட, வித்தியாசமான உடைகளை அணிந்து வந்து, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர். 'உணவுக்காக, விலங்குகள், பறவைகளை வேட்டையாடக் கூடாது என்பதை, பொதுமக்களுக்கு வலியுறுத்துவதற்காகத் தான், இப்படி ஒரு வித்தியாசமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தோம்' என்றனர், 'பீட்டா' அமைப்பினர்.- ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !