வாராய் என் தோழி; வாடகை தோழி!
பொருட்களை வாடகைக்கு எடுத்த காலம் போய், இப்போது, மனிதர்களை வாடகைக்கு எடுக்கும் காலம் வந்து விட்டது. அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்த இளம் பெண், ஜென் கிளாண்டா. இவரின் தோழிகள் சிலருக்கு, சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணங்களில், மணப்பெண்ணுக்கு ஜென் கிளாண்டா தான் தோழியாக இருந்துள்ளார். இந்த புதுமையான அனுபவம் இவருக்கு பிடித்துப் போகவே, இதை வைத்து பணம் சம்பாதிக்க முடிவு செய்தார். அதனால், 'திருமணங்களில், மணப்பெண்களுக்கு தோழி வேண்டுமா... அணுகவும்...' என, நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார். இதைப் பார்த்து ஏராளமானோர் அவரை தொடர்பு கொள்ள, தற்போது மணப்பெண் தோழியாவதே இவரின் பிரதான தொழிலாகி விட்டது. இதனால், கிளாண்டோவின் வங்கி கணக்கு, எகிறி விட்டது.— ஜோல்னாபையன்.