உள்ளூர் செய்திகள்

காமெடி நிகழ்ச்சி படுத்தும் பாடு!

மலையாள தொலைக்காட்சிகளில், 'மிமிக்ரி' நிகழ்ச்சி ஒன்று, பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அரசியல்வாதிகளையும், மத தலைவர்களையும் நையாண்டி செய்யும் இந்நிகழ்ச்சியை, யாரும் எதிர்ப்பதில்லை. இதை பார்க்கும் குழந்தைகள், அரசியல் தலைவர்களை காமெடியன்கள் என்றே நினைத்து விட்டனர்.இது குறித்து, கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில், 'ஒருநாள் ரயில் நிலையத்தனில், ரயில் பெட்டியில் ஏறுவதற்காக, அவசரமாக நடந்து சென்றபடி இருந்தேன். ஐந்து வயது சிறுவன் ஒருவன் என்னைப் பார்த்து, சிரித்து, 'உம்மன் சாண்டி அங்கிள், ஒரு காமெடி சொல்றீங்களா?' என்றான். அதைக்கேட்டு நானும், அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டோம். அடிக்கடி என்னை காமெடி ஷோவில் காட்டுவதால், நான் காமெடியன் என்றே அச்சிறுவன் நினைத்து விட்டான்...' என்றார்.இந்நிகழ்ச்சிக்கு, இதுவரை எந்த தலைவரும் எதிர்ப்பு காட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !