உள்ளூர் செய்திகள்

கருத்து கந்தசாமி!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள, EPIC என டைப் செய்து, இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும். 'No Record found' என்று வந்தால், 1950 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளவும். வாக்களிப்பது நம் கடமை. வாக்களிக்கும் உரிமை பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்வது நம் பொறுப்பு.வெயில் சுட்டெரிக்கிறது. முன்பெல்லாம், பல்வேறு கட்சிகள் சார்பில், நீர், மோர் பந்தல் வைத்திருப்பர்; இப்போது ஒன்றையும் காணோம். விசாரித்தால், தேர்தல் ஆணையம் உத்தரவு என்கின்றனர். அட... தேர்தல் விதிமுறைகள் குறித்த விளம்பரம் வைத்து, தேர்தல் ஆணையமாவது நீர், மோர் பந்தல் வைக்கலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !