ஆதிவாசிகளுக்காக இரங்கிய மருத்துவர்!
அமெரிக்காவில் அதிக சம்பளம் பெற்று, 'பிசியோதெரபிஸ்ட்' ஆக பணியாற்றியவர், இந்தியாவை சேர்ந்த, டாக்டர் தாமஸ் மேத்யூ. தாயகம் திரும்பியவர், மருத்துவ வசதியின்றி தவிக்கும், ஏலகிரி ஆதிவாசிகளின் நிலை அறிந்து வருத்தப்பட்டார். இதுபற்றி, புதுச்சேரி ஸ்ரீமணக்குள வினாயகா மருத்துவ கல்லுாரி இயக்குனர், டாக்டர் ராஜகோவிந்தனிடம் சொன்ன போது, '53 வயதிலும் டாக்டர் பட்டம் பெற்று, சேவை செய்யலாம்...' என்றார். அமெரிக்காவில், உடன் பணியாற்றிய, 78 வயது பெண்மணி ஒருவர், டாக்டர் பட்டம் பெற்ற சம்பவம் பற்றி கேள்விப்பட்டார். 'பிசியோதெரபிஸ்ட்' வேலையை உதறி, இப்போது எம்.பி.பி.எஸ்., டாக்டராகி, ஏழை, எளிய ஆதிவாசிகளுக்காக, சேவை செய்து வருகிறார், டாக்டர் தாமஸ் மேத்யூ.— ஜோல்னாபையன்.