உள்ளூர் செய்திகள்

ஹாலிவுட் நடிகையின் காஸ்ட்லி கழிவறை!

மாடல் மற்றும் சமூக சேவகியான, ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியானுக்கு பல முகங்கள் உண்டு. புதுமை என்ற பெயரில், எக்குத்தப்பாக, எதையாவது செய்து, அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது, இவருக்கு வழக்கம். லேட்டஸ்ட்டாக இவர் செய்திருக்கும் புதுமை என்ன தெரியுமா? லாஸ் ஏஞ்சல்சில் உள்ள, தன் வீட்டில், தனக்கென பிரத்யேகமாக ஒரு கழிவறையை அமைத்திருக்கிறார். இதற்காக, 55 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார்.'ஒரு கழிவறை அமைப்பதற்காக, இவ்வளவு அதிகமான பணத்தை வீணடிக்க வேண்டுமா?' என்ற கேள்விக்கு, 'என் வீட்டுக்கு, உறவினர்களும், விருந்தினர்களும் அதிகமாக வருகின்றனர். இதனால், எங்கள் வீட்டு கழிவறை, போதிய சுகாதாரமின்றி இருந்தது. நான் மட்டுமே உபயோகிப்பதற்காக, இவ்வளவு பணத்தை செலவழித்து, கழிப்பறையை கட்டியுள்ளேன். சுத்தம் தானே சோறு போடும்...' என, எதிர்கேள்வி கேட்கிறார், கிம்.— ஜோல்னா பையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !