சைபர் கிரைம் இங்கு ஏராளம்!
ஜார்க்கண்ட் மாநிலம், ஜம்தாரா மாவட்ட தெருக்களில், ஏராளமான, 'இன்டர்நெட் சென்டர்'கள் உள்ளன. வளர்ச்சியின் எந்த அறிகுறியும் இல்லாத இந்த இடத்தில், இவ்வளவு 'இன்டர்நெட் சென்டர்'களா... என வியப்படைய வேண்டாம். நம் நாட்டில், இன்டர்நெட் வங்கி திருட்டின், 40 சதவீதம் இங்கு தான் நடைபெறுகிறது. இவர்கள், கேரள மாநிலத்தில் தான் அதிக கைவரிசை காட்டுகின்றனர். வங்கியிலிருந்து பேசுவதாக கூறி, ஏ.டி.எம்., கார்டின் பின் நம்பரை தெரிந்து, கொள்ளை அடிப்பது சர்வ சாதாரணம். 'சைபர்' திருட்டு குழு தலைவரான புகல் மண்டலின் சொகுசு பங்களாவில் நடைபெற்ற சோதனையில், போலி விலாசங்களில், 60 சிம் கார்டுகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகளும் இருந்தன. இதுவரை, இங்கு, 116 சைபர் குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.— ஜோல்னாபையன்.