அட... அதுவா இது!
படத்தைப் பார்த்ததும், 'ஐயோ பாவம்... இந்தக் குழந்தைக்கு என்ன நோயோ... இவ்வளவு பெரிய பற்களுடன் பிறந்து விட்டதே...' என்று வருத்தப்படுகிறீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஏமாந்து விட்டீர்கள் என அர்த்தம். காரணம், இது குழந்தையின் பற்கள் அல்ல; நம்மூரில் குழந்தையின் வாயில் திணிப்பரே... நிப்பில்... அதைத் தான் அமெரிக்காவில் இப்படி வடிவமைத்துள்ளனர். இதை பார்க்கும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிக்கின்றனர். குழந்தைக்கு தெரியுமா... இவர்கள் ஏன் இப்படி சிரிக்கின்றனர் என்று!