மதிப்பிற்குரிய திருநங்கையர்!
படத்தில் காணப்படுவோர், திருநங்கையர். இவர்களை யாரும் ஏளனம் செய்ய முடியாது; தலைவணங்கி தான் ஆகவேண்டும். காரணம், இவர்கள் மூவரும் நீதிபதிகள்; நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி என்ற பெருமை, முதல் படத்தில் உள்ள, ஜோயிதா மொடால் மகியை சேரும். இவர், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, பெற்றோருடன் சண்டையிட்டு, தெருவில் இறங்கினார். பஸ் நிலையத்தில் உறங்கி, பிச்சை எடுத்தார். பின், தனியார் பயிற்சி பள்ளியில் படித்து, சட்டம் பயின்று, படிப்படியாக உயர்ந்து, ஜூலை, 2017ல், 'லோக் அதாலத்' நீதிபதி ஆனார். இனியும், இவர்களை ஏளனம் செய்யணுமா... இல்லை மதிக்கப் படணுமா... யோசியுங்கள்!— ஜோல்னாபையன்.